Advertisement

மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி; யூ டியூப் சேனல் நிர்வாகி கைது

Share
சென்னை : ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை துாண்டுதல் உட்பட, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


'கருப்பர் கூட்டம்' யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சேனலை தடை செய்ய வேண்டும்' என, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர், பால் கனகராஜ், 13ல் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர், ராம.ரவிகுமார் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.


இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சர்ச்சைக்குரிய, யு டியூப் சேனல்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம், 153. ஆத்திரமூட்டி கலகம் ஏற்படுத்துதல், 153 ஏ, பேச்சு, எழுத்தால், மத, இன, மொழி, ஜாதி, சமய விரோத உணர்ச்சிகளை துாண்டிவிட முயற்சி செய்தல், 505 (1) மதக்கலவரத்தை துாண்டுவது என, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒருவர் கைது:சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளி களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில், சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49 என்பவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்:ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் சீதாலட்சுமியை சந்தித்து, புகார் அளித்தனர்.பின், ஹிந்து முன்னணி அமைப்பினர் கூறுகையில், 'தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது. எனவே, காவல் துறை அலட்சியம் காட்டாமல், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றனர்.


இதற்கிடையில், 'கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய நபர்களை கைது செய்யாமல் இருப்பது ஏன்?' என, விளக்கம் கேட்டு, நேற்று மாலை, 4:30க்கு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், அரவிந்தன் சங்கர் என்பவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக, அவரது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பேச்சு நடத்திய போலீசார், அவரை, வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சமரசம் செய்து அனுப்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (113)

 • dina - chennai,இந்தியா

  யவன் அப்பன் வீடு சொத்து? தமிழும் ........தமிழகமும்.......... அது இன்று தி மு க வின் திருடர்கலால் அவமானம் கருணாநிதி உலக பொது மரை திருக்குறளுக்கு விளக்கம் எழுத்துவானம் அவன் அடி ஆட்கள் தமிழ் கடவுளை கேவலப்படுத்துவர்களாம் என்ன கொடுமை சரவணா..........

 • Dadu - Chennai,இந்தியா

  தமிழ்மறை திருக்குறளை படித்து வாழ இந்த கூட்டம் முதலில் முனையவேண்டும். தரம் தாழ்ந்த செயல் தண்டனைக்கு உரியது.

 • Dadu - Chennai,இந்தியா

  அறம் பற்றி பேச ஓர் அருகதை வேண்டும். முதலில் தமிழ்மறை திருக்குறளை படித்து வாழ இந்த கூட்டம் முதலில் முனையவேண்டும். மதமாற்ற மற்றும் திராவிட கட்சிகளிடம் பணம் வாங்கி தரம் தாழ்ந்த செயல் செய்தமைக்கு தண்டனை உண்டு. பாவ மன்னிப்பு() எல்லாம் கிடையாது இங்கே.

 • Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா

  உண்மையில் தமிழனின் உண்மையான மதம் என்ன என்று மறந்தேபோய்விட்டது. பிராமணர்கள் வந்துதான் ஹிந்து மதத்தை பற்றியும், வழிபாட்டுமுறைப்பற்றியும் சொல்லியும் செய்தும் வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதற்குமுன் தமிழன் என்ன வழிபட்டான் என்று மறக்கப்பட்டுவிட்டது என்றுதான் நன் நினைக்கிறேன். உண்மையான தமிழனின் அடையாளத்தை தொலைத்துவிட்டு தேடிக்கொன்டு இருக்கின்றான். தமிழனின் கடவுள் முருகன் என்றால் அவன் மனதுக்குப்பட்டாற்போல் வழிபட்டால் இவர்களுக்கு என்ன? ஏன் வேறு மதத்தவர்களும் பிறகு வந்தவர்களும் இப்படி சண்டைபோடவேண்டும். அவர் அவர் பிழைப்புக்காகமட்டுமே என்று தெரிகிறது.

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

   If you read Tamil literature, this doubt would not have raised in your mind, mr.Subramanian Veeranahtan. " Thirumurugatrupadai " is only sufficient to prove what and who is the Tamil God.

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

   I usually play Shashti Kavacham daily in the morning. Today I am shocked to find " Karuppar Koottam" video included in this Skanda Shashti Kavacham list, running for 7.51minutes. I reported it as " Hateful or abusive content " . But it still continues to be there in the list.

 • SENTHIL - tirumalai,இந்தியா

  துன்பத்தின் போது நண்பனை தெரிந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

  • SENTHIL - tirumalai,இந்தியா

   துன்பத்தின் போது நண்பனை தெரிந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இன்று நமது துன்பத்தில், நமக்கு உண்மையில் யார் நண்பர்கள், யார் எதிரிகள், யார் துரோகிகள் என அடையாளம் காண இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. இனிமேலும் முழித்து கொள்ளாத ஹிந்து பெருமக்கள் இனிமேலும் மூழ்கி கிடைக்க வேண்டியது தான்...

Advertisement