Advertisement

கேரளாவில் புதிதாக 623 பேருக்கு கொரோனா

Share
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவர் பலியானார்

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,553 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் பலியானதையடுத்து மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4,880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 623 பேரில், 96 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 76 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 432 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் கொரோனா பரவி உள்ளது.

திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 157 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 74 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 72 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 64 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 64 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 55 பேருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் 35 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 25 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 20 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 19 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 11 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், வயநாட்டில் 4 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 16,443 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் 1,84,601 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

    The Tamils will get hurt.

Advertisement