dinamalar telegram
Advertisement

மார்க்சிஸ்ட் கட்சி தலைவரிடமிருந்து கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு 16 அழைப்புகள்

Share
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.டி.ஜலீலும், தங்க கட்டிகள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவும் 16 முறை தொலைபேசி அழைப்புகளில் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் கடத்த முயன்றது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, துாதரகத்தில் பணியாற்றிய, பி.எஸ். சரித் கைது செய்யப்பட்டார். துாதரகத்தில் முன்பு பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஸ்வப்னா பணியாற்றி வந்தார். தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.டி.ஜலீல், 16 முறை மொபைலில் அழைத்து பேசியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் நவ்விடம் பேசிய ஜலீல், ஸ்வப்னாவுடன் பேசியதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், தங்க கடத்தல் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, வழக்கின் 3வது குற்றவாளி, முஸ்லீம் லீக் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக துபாயில் வசிக்கும் பாசில் பரித்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர, என்.ஐ.ஏ., திட்டமிட்டுள்ளது. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கருடன், ஸ்வப்னா உள்ளிட்ட தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தொலைபேசியில் பேசியதாக அழைப்பு பதிவுகள் தெரிவிக்கின்றன.

அழைப்பு குறித்து பினராயி விஜயன் கூறுகையில், 'ஸ்வப்னா ஐடி துறையில் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜலீல், அப்பெண்ணுக்கு கால் செய்தது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும், யுஏஇ துணை தூதரகத்திலிருந்து அவருக்கு வந்த குறுந்தகவலின், ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறும். சிவசங்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்வப்னாவுக்கு ஜலீல் பேசிய இரு அழைப்புகள், 2020 ஏப்ரல், மே மாதங்களில் செய்யப்பட்டன. இதுகுறித்தும் என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (55)

 • NARAYANAN.V - coimbatore,இந்தியா

  நரி இடம் போனால் என்ன இல்லை வலம் போனால் என்ன, நமக்கு முதல்வர் பதவி மிஞ்சினால் போதும் என்று கேரளா முதல்வர் ஒதுங்கிக்கொண்டிருப்பாரோ? எல்லாவற்றையும் விசாரணை அமைப்புகளே வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  கேரளாவுக்கு வருகை தரும் என்.ஐ.ஏ வை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.எனக்கென்னவோ என்.ஐ.ஏ கேரளாவுக்கு மீன் பிடிக்க வந்ததாக தெரியவில்லை, பெரிய திமிங்கல வேட்டைக்கு வந்து இறங்கியிருக்கிறது. கொள்ளப்பயலுக சிக்கப்போறாய்ங்க. கேரளாவில் இன்று நேற்றல்ல 30, 35 வருடங்களாகவே கேரளாவில் மாஃபியா கும்பலின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. தங்கக்கடத்தல், ப்ரவுன் சுகர், இஸ்லாமிய பயங்கரவாததிற்கு, நக்சல்கள் ஆக்டிவிட்டிஸ்களுக்கு பெருமளவு ஃபைனான்ஸ், மதமாற்ற மாஃபியா கும்பலின் ஃபைனான்ஸ் என்று கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கிறது. அஜித் தோவல் சார், இனி என்.ஐ.ஏ நின்று நிதானமாக வேட்டையாடும் அழகைக்கான இந்திய மக்கள் ஆவலாக இருக்கிறோம். அப்டியே இன்னொரு அக்கப்போர் வெகுகாலமாக நடக்கிறதே அதான் அரபுநாட்டு பயணிகளுக்காக நடக்கும் நிக்காஹ் வித் தலாக் பேக்கேஜிங் விபச்சார டூரிசம். அதையும் கவனிங்க,

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  கம்யூனிட்டு காரன்களை சும்மாவிடக்கூடாது. திருட்டு பயல்கள் துரோகிகள் அழிக்க வேண்டிய அய்யோக்கியர்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆமா அதுக்கப்புறம் இருவரும் சேர்ந்து இந்த ஓட்டலுக்கு இவ்வளவு முறை சென்றனர். சும்மா வள வள என்று மீடியாவில் எழுதுவதற்குத்தான் இந்த விசாரணை விசாரணை மற்றபடி ஒரு பைசா பிரயோஜனம் பிரயோஜனம் பிரயோஜனம் சுத்தமாக இல்லை.

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  மாநில பீசேபீக்கு இதில் தொடர்பு இருக்கு என்று அடி படுதே உண்மையா

Advertisement