Advertisement

எல்லாரும் அப்படித் தான்!

Share
'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, ஜூலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.கடந்த, சனிக்கிழமை மாலை, 5:50 மணிக்கு, சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள, பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்ப, 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் குவிந்திருந்தன.

இதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'பாருங்க தம்பி... காலையில இருந்து காத்தாடிய பெட்ரோல் பங்க்குல, இப்ப கூட்டம் அலைமோதுது. மக்களிடம் விழிப்புணர்வே இல்லப்பா...' என, நொந்துக் கொண்டார்.

அதற்கு அந்த வாலிபர், 'ஆமாங்க அய்யா... பாருங்க, 'பீல்' பண்ணுற நீங்க கூட, கடைசி நேரத்துல தான், பெட்ரோல் பங்க்குக்கு வந்துருக்கீங்க...' என்றதும், அந்த முதியவர், அவரை முறைத்தபடி நகர்ந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த டோட்டல் ஊரடங்கால் முதல் நாள் எல்லா கடைகள், பெட்ரோல் பங்குகள், என்று கூட்டம் கூடி, ஒரு வாரத்துக்கு உண்டான தொற்றை ஒரே நாளில் முடித்துவிடுவது தான் நடக்கிறது

Advertisement