ADVERTISEMENT
குன்னுார்:குன்னுார் நகராட்சி கட்டடத்தில், வரலாற்று கலை கூடம் நேற்று திறக்கப்பட்டது.குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், செயல்பட்டு வந்த எம்.பி., அலுவலகம், பொலிவிழந்து காணப்பட்டது. முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்ட இந்த பகுதியை, நகராட்சியுடன், 'கிளீன் குன்னுார் ' அமைப்பு, 'வின்டர் பிளைட்' சங்கம் ஆகியவை இணைந்து, துாய்மைபடுத்தி, வரலாற்று கலைக்கூடமாக மாற்றின. இதனை குன்னுார் எம்.எல்.ஏ., சாந்தி ராமு நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பாலு, நகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாதன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், கிளீன் குன்னுார் அமைப்பு நிர்வாகிகள் சமந்தா, வசந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், 1831ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்து, புகைப்படங்களுடன் விபரம், ஓவியங்கள், பழைய வரைபடம் இடம் பெற்றுள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!