Advertisement

தி.மு.க.,வின் உள்ளே வெளியே!

Share
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், வேலுாரில் சமீபத்தில் நடந்தது.அமைச்சர்கள், வீரமணி, நிலோபர் கபில், கலெக்டர்கள், சண்முகசுந்தரம், சிவன் அருள், திவ்யதர்ஷினி மற்றும் எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின், அமைச்சர், வீரமணி, நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை சந்திக்கும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்து, அவர்களை பாராட்டுகின்றனர். பின், வெளியில் வந்து, 'கொரோனா தொற்றை தடுக்க, அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றஞ்சாட்டுகின்றனர்' என்றார்.

இளம் பத்திரிகையாளர் ஒருவர், 'அரசியல்ல, தி.மு.க., உள்ளே, வெளியே விளையாடுதுன்னு, அமைச்சர் சொல்லுறாரோ...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Baskar - Paris,பிரான்ஸ்

    உண்மையை சொன்னா சிரிப்புதான் வரும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசு செய்யும் ஒவ்வொன்றையும் விமர்சித்துதான் தங்கள் இருப்பை காட்டுவது மக்களிடையே வெறுப்பை நாளடைவில் ஏற்படுத்தும். கட்சியின் பேர் கெடும் வாய்ப்புண்டு.

Advertisement