Advertisement

களப்பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை

Share
சென்னை,:தொண்டு நிறுவன ஊழியர்கள், தொற்று தடுப்பு பணியில் சேர்ந்துள்ளதால், மாநகராட்சி நேரடியாக நியமித்த களப் பணியாளர்களை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், தொற்று பரவலை எளிதில் கண்டறியும் வகையில், வீடுகள் தோறும் கண்காணிக்க, ஏப்ரலில் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு களப் பணியாளர், 100 முதல், 160 வீடு வரை கண்காணிக்கின்றனர். இவர்களுக்கு, ஆறு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தொண்டு நிறுவனங்கள் சார்பில், மண்டலம் வாரியாக, 200 முதல், 300 பேர் வரை, நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மாதம், 13 முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.
இவர்கள், குடிசை பகுதியை மையப்படுத்தி, தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே, குடிசை பகுதியில் களப் பணியாளர்கள் உள்ளனர்.ஒரே இடத்தில், இரண்டு பேர் செல்வதால், பல்வேறு குழப்பம் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை.இதனால், களப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. தாமதமாக பணிக்கு சேர்ந்தவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், பொதுமக்களால், அதிக புகார்களுக்கு ஆளானவர்கள் என, மண்டலத்திற்கு, 250 பேர் வீதம் குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement