Advertisement

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ; முதல்வர் பினராயி எச்சரிக்கை

Share
திருவனந்தபுரம் : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் அதற்கு எதிரான போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமாகவே உள்ளது. மாநிலத்தில் இதுவரை 6,950 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 27 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் நோய் பாதிப்புகளில் இருந்து 3,820 பேர் குணமடைந்துள்ளனர். 3,103 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் கொரோனா தொற்றுக்கான போரில் அதிகம் தியாகம் செய்துள்ளோம். கொரோனா தொற்றை ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளோம். மீண்டும் அதுபோல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதிப்புகளை குறைக்க முடியும். அது நிச்சயம் சாத்தியமாகும்.
பாதிப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் நமக்கு தெரியும். ஆயினும் நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • rajan -

    ரொம்பவும் பீற்றிக் கொண்டீர்களே கேரளாவில் கொரோன தோற்று போய்விட்டது என்று. நான்தான் அப்பவே சொன்னேனே இரண்டாவது இன்னிங்ஸ் வரும் அப்போது பார்த்துக்கொள்வோம் என்று. கொரோனாவை விட ஒரு கொடிய நோய் ஸ்வப்னா நோய் இப்போது உங்களை பிடித்து ஆட்டிக்கொண்டு உள்ளது. அதிலிருந்து நீங்கள் வெளி வரவே முடியாது. உங்கள் பதவி நிச்சயம் வரி போய்விடும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    யோவ் கெட்டிக்காரன் புளுகு வெளுத்துப்போச்சு .வேணும்னே கோராணாபாதிப்புஇல்லேன்னு கதை விட்டீரே

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    கடத்தலை மறைக்க கொரோனாவா, நடத்துங்க தோழரே

  • தியாகி சுடலை மன்றம் -

    அப்படி என்றால் சுடலையை ஒரு மாதம் வைத்து உங்கள் ஊரில் கொள்ளவும்

  • Mithun - Bengaluru,இந்தியா

    கோல்ட் சொப்னா கைது.

Advertisement