dinamalar telegram
Advertisement

கொரோனாவுக்கு, 4வது பலி: முன்னெச்சரிக்கை அவசியம்: சுகாதாரத்துறையினர் அட்வைஸ்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்த 85 வயது முதியவர், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்துள்ளார். இத்துடன், நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, 262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 150 பேர் குணமாகிவிட்டனர்.
108 ஆம்புலன்ஸ் டிரைவர், சிவசுப்பிரமணியம் நகர் பகுதியை சேர்ந்த முதியவர் ஆகிய இருவரும், கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.தாராபுரம், ரெட்டாரவலசு பகுதியை சேர்ந்த, 68 வயதுள்ள முதியவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதற்கு பிறகே, அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, கொரோனா பாதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நான்காவதாக திருப்பூரை சேர்ந்த மற்றொரு முதியவர் நேற்று பலியாகியுள்ளார்.
திருப்பூர் லட்சுமி நகர், 60 அடி ரோடு பகுதியை சேர்ந்த, 85 வயது முதியவர், கொரோனா உறுதியாகி, 8 ம் தேதி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருடன், கொரோனா பாதிப்புக்கு ஆளான, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் பலியாகியுள்ளனர்.
சுகாதாரத்துறையினர் கூறுகையில்,'கொரோனா தொற்று பாதித்தவர், எளிதாக குணமாகி வருகின்றனர்.இருப்பினும், சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக கோளாறு உள்ள முதியவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனாவுக்கு பலியாகின்றனர். எனவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement