dinamalar telegram
Advertisement

எப்போது வருவார்களோ...! பவுண்டரிக்கு தொழிலாளர்கள் பம்ப் உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி

Share
Tamil News
கோவை:ஆட் பற்றாக்குறையால், தேவைகள் இருந்தும் உற்பத்தியை பெருக்க இயலாத பரிதாப சூழ்நிலை, கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, பக்கத்து மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர, 'பாஸ்' வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் உள்ள பவுண்டரிகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில், இரண்டு லட்சத்துக்கும், மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்தனர். இந்த தொழிலாளர்கள், தற்போது சொந்த ஊருக்கு சென்று விட்டதால், கோவையில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பவுண்டரிகளில், வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பம்ப் உற்பத்தி தொழிலில், முன்னணியில் உள்ள கோவை இதனால் திணறி வருகிறது.40 சதவீதம் வீழ்ச்சிஇந்தியாவில் ஆண்டுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பம்ப் செட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகி வருகிறது.இவற்றில் பாதிக்கு மேல், கோவையில்தான் தயாராகி வருகிறது. பவுண்டரிகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பம்ப் உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி, 40 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. விவசாயம், வீட்டு உபயோகம், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, பயன்படுத்தப்படும் பம்ப்களில், தற்போது தொழிற்சாலைகளின் தேவை மட்டுமே குறைந்துள்ளது.விவசாயம், வீட்டு உபயோகத்திற்கான பம்ப்களின் தேவை இருந்தும், உற்பத்தி செய்ய முடியாத நிலையில், கோவை பம்ப் நிறுவனங்கள் உள்ளன.
பாஸ் வேண்டும் அரசே!
பவுண்டரிகளில் பம்ப் தயாரிப்புக்கு தேவையான, வார்ப்படங்கள் தயார் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, பவுண்டரிகளில் வேலை பார்க்க, பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் வர தயாராக இருந்தாலும், பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆகவே, குறைந்தபட்சம் ஒரே மண்டலத்துக்கு உட்பட்ட, மாவட்ட தொழிலாளர்களையாவது, உரிய பரிசோதனைகளுக்குப் பின், கோவைக்கு பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என, தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) கோரிக்கை விடுத்துள்ளது.
காணொலி வழியாக நடந்த செயற்குழு கூட்டத்தில், சீமா தலைவர் கிருஷ்ணக்குமார், துணைத்தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று, தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையை, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.காலி இடங்களை நிரப்ப, அருகில் உள்ள மாவட்டங்களை சார்ந்தவர்கள் வர தயாராக உள்ளனர்.
ஆனால், பாஸ் கிடைப்பதில்லை. உரிய பரிசோதனை முறைகளை மேற்கொண்ட பின்னர் அனுமதித்தால் போதும். புதியதாக வருவோருக்கு பயிற்சி அளிக்க முடியும். பவுண்டரிகளில் அதிக வேலையாட்கள் தேவை. பவுண்டரிகளில் வேலை நடந்தால் மட்டுமே, பம்ப் தயாரிக்க முடியும். விவசாயத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பம்ப் அவசியம் என்பதால், இதன் தேவையும் அதிகமாக உள்ளது.-கார்த்திக், டெக்கான் பம்ப் உற்பத்தியாளர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • RajanRajan - kerala,இந்தியா

    அந்த ஊரகபணி 100 நாள் வேலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவையுங்கள் குரானா தாக்கம் தீரும் வரை

  • Subramanian -

    மிகவும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும உள்ளது. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பற்றாகுறையா அல்லது எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? இந்த சந்தர்பத்தை கொண்டு நம் உள்ளூர் தொழிலாளர்கள் வேலைவாய்பை பயன்படுத்தி பயன்பெறலாமே. எதற்க்கு வெளிமாநில தொழிலாளர்களை சார்ந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் 1. உள்ளூர் தொழிலாளர்கள் திராவிட கட்சிகளின் மிக தவறான இலவசங்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர் 2. குறைவான வேலை செய்து அதிக சம்பளம் கொடுக்கவேண்டும். 3. பாழாய்போன டாஸ்மாக் கலாச்சாரம். 4. உருப்படாத சினிமாக்கள். 5. சோம்பேறிகளாகவே வாழ பழகி விட்டனர்.உழைத்தால் உற்பத்தி கூடும், அதனால் செல்வ வளர்ச்சி உண்டாகும், நல்ல வாழ்க்கை அமையும் என்பதை எப்பொழுது நம்ம ஊர் தொழிலாளர்கள் எண்ணுகின்றார்களோ அன்று தான் விடிவு காலம்.

Advertisement