Advertisement

என் மகனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுங்கள்: விகாஸ் துபேயின் தாயார்

Share
லக்னோ: 'என் மகன் செய்த தவறுகளுக்கு, சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என உ.பி.,யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின் தாயார் தெரிவித்தார்.

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில், உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்த போது கைது செய்யப்பட்டான்.
விகாஸ் துபே கைது குறித்து அவனது தாயார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் மகன் ஒவ்வொரு ஆண்டும் மஹாகாலர் கோயிலுக்கு செல்வான். இப்போது அவனை கால பைரவர் தான், சாவிலிருந்து காப்பாற்றி உள்ளார். என் மகன் பா.ஜ.,வில் இல்லை. சமாஜ்வாதி கட்சியில் இருக்கிறான். அவன் செய்த தவறுகளுக்கு சரியான நடவடிக்கைகளை அரசு ஏடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவன் போலீசாரை சுட்டுக் கொன்ற போது, தன் மகனை என்கவுன்டர் செய் வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகாஸ் துபே கைது குறித்து அகிலேஷ் யாதவ், 'போலீசார் விகாசை கைது செய்தனரா அல்லது அவர் சரணடைந்தாரா' என கேள்வி எழுப்பி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அது தான் எனவுன்டர்ல போட்டாச்சு அம்மா அப்புறம் எதுக்கு இந்த நியூஸ்

    • s.rajagopalan - chennai ,இந்தியா

      ஆமாம் யா? ...சமஜ்வாதிக்கு துப்பில்லை போல ... பேசறாய்ங்க ..பேச்சு

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

    அய்யா எங்கே பிஜேபி என்று பார்த்தாலும் உணர்ச்சி வாச படுவார் , பாவம் எப்படி எல்லாம் பெயரை மாற்றினாலும் குடுமி வெளியே தெரிகிறது , குல்லா போட்டு மறைக்கவும்

    • SanDan - NYK,யூ.எஸ்.ஏ

      He belongs to Samajwadi

  • ஜெய் ஸ்ரீ ராம் -

    அது எப்படி இந்த டிவி நேரா குற்றவாளியின் அம்மா, குடும்பத்தையெல்லாம் தேடி புடிச்சு பேட்டி எடுக்குது. அனுதாப அலை ஏற்படுத்தி வழக்கும், தண்டனையும் பல வருடம் இழுத்தடிக்கப்படும். எதிர்கால கருணை மனுவுக்கு இது உதவும்.

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    தாயை விட நீதிமன்றம் என்ன கூற முடியும். ஆண்டவனே தீர்ப்பு உங்கள் கையில் .

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    oru thaayin maname kevalappadumbodhu ivanaiyellaam vachu saiyunngo .

Advertisement