Advertisement

கேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி

Share
புதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார்.
\

இதில் தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றியவருமான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.


இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ள நிலையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உண்மையை வெளிவர என்.ஐ..ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  ஸ்வப்னா வை அதிகாரி என்று சொல்லுறாங்களே மெய்யாலுமா அவள் பத்தாங்கிளாஸ் படிச்சவ என்றும் போட்டிருந்தான் ஒருவன் எப்படி இதையெல்லாம் நம்பறது மேக்கப்புடன் இருக்குது இந்தலெடி பெரிய படிப்பெல்லாம் படிக்காமல் எப்படீங்க அதிகாரி ஆவமுடியும் எப்படியோ கேரளத்து சசிகளைப்போல இருக்கா சசி ஜெயம்மாவை அழிச்சு இவை என்ன எதை அளிக்கபோறாளோ

 • Sampath Kumar - chennai,இந்தியா

  எம்புட்டோ தங்கம் கடத்திகிட்டு இருக்கானுக அதுக்கு ellam என் எஸ் இ விசாரணை இல்லை இதுக்கு மட்டும் பிஜேபியின் சதி திட்டம் புரிகிறது

 • Vasudevan Jayaraman - Chennai,இந்தியா

  ஸ்வப்னாவை பிடித்தாலும் , பேரம் பேசி விடுவார்கள். அதற்குள் இன்னொரு கேஸ் வந்துடும் , மக்களூம் மறந்து விடுவோம் . உண்மையாக அரசியல் வியாதிகளுக்கு நம் போன்று டீசென்ட் ஆட்கள் தேவை இல்லை. அவர்களுக்கு நிறைய ஸ்வப்னாகள் தேவை. சேகர் ரெட்டியை பிடிப்பது போல் பிடித்து பின்னர் திருப்பதி கோவிலில் பெரிய பதவி கொடுத்து ரொம்ப நாட்கள் ஆகவில்லை .

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  விரிவான விசாரணை நடத்தவேண்டும். இவருக்கும் , எமிரேட்ஸிலேயே நூற்றுக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஏமாற்றி கொள்ளையடித்து சென்றவர்களுக்கும், உலகளாவிய விஷமிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கவேண்டும் . தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . மேலும் இவருக்கும் இஸ்ரோ தலைவருக்கும் , உலகளாவிய கடத்தல் கும்பல்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும் .

 • நக்கல் -

  தமிழக கவர்னர் மாளிகைக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு மாதம் விவாதம் செய்த தமிழ் அடிமை ஊடகங்கள் ஏன் பினராய் ஸ்வப்னா சுரேஷ் பத்தி ஒரு மணி நேரம் கூட விவாதம் செய்யவில்லை... யோசியுங்கள் மக்களே...

Advertisement