Advertisement

10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததால் அதை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சென்னையைப் பொறுத்தவரை ஊரடங்கில் சற்று தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களும் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு செல்லும் 10 சதவீத ஊழியர்களும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அமைந்துள்ள ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • vns - Delhi,இந்தியா

    50% தொழிலாளர்களை ஒருநாள் விட்டு ஒருநாள் கூப்பிடலாம் அல்லது ஒருவாரம் விட்டு ஒருவாரம். இதன்மூலம் 6 அடி சமூக இடைவெளியையும் கடைபிடிக்கலாம். X போன்ற அமைப்பில், ஒவ்வொரு வாரமும் ஒரு கோட்டின் இருக்கையில் உள்ளவர்களை கூப்பிடலாம்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    பத்து சதவீத அமைச்சர்களுடன் தமிழக அரசு இயங்கலாமே? எதுக்கு இவ்ளோ பேரு?

Advertisement