dinamalar telegram
Advertisement

பசுமையாக மாறும் தரிசு நிலம்! இது, வனத்துக்குள் திருப்பூரின் பலம்

Share
Tamil News
திருப்பூர்,:சிறப்பு வழிபாட்டுடன், பொன்னிவாடி, குன்னந்தைவலி வலசு கிராமத்தில் நேற்று, 910 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 'டாலர் சிட்டி' மாவட்டத்தை பசுமை போர்வையால் அலங்கரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது.
வானம் பார்த்த பூமியாக கிடந்த தரிசு நிலமெல்லாம், குறுங்காடுகளை கொண்ட பசுமை பிரதேசமாக மாறியுள்ளன.அவ்வகையில், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க, விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
தாராபுரம், பொன்னிவாடி, குன்னந்தைவலி வலசு கிராமத்தில், விளையாக்காடு தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.நில உரிமையாளர் குடும்பத்தினர் முத்து கிருஷ்ணன், ஜெயந்தி, ரங்கராஜன், பத்ரிநாராயணன், விழுதுகள் அமைப்பு வீரமணி, கோகுல் பிரசாத், பொன்னிவாடி ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரும், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.முன்னதாக, மரக்கன்றுகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு பணி துவங்கியது.
மலைவேம்பு, நாட்டு அத்தி, செம்மரம், தேக்கு, நாட்டு பலா, மூங்கில், கொடுக்கா புளி, இலுப்பை, நாவல், நாட்டு வாகை, புங்கன், பூவரசு என, 910 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அர்ஜுன் சென்னை -

    மிக்க மகிழ்ச்சி

Advertisement