dinamalar telegram
Advertisement

டபுள் : காசு மட்டுமல்ல... வைரசும் கிடைக்கும்: ஏ.டி.எம்.,மெஷின்களால் உரசல்

Share
Tamil News
கோவை:வங்கி ஏ.டிஎம்., மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் உள்ளதால், பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களும், டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களும், சமூக இடைவெளி இன்றி நிற்கின்றனர். நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோவையில், 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன.
ஆறு அடி நீள, அகலம் கொண்ட சிறிய அறைக்குள் பணம் எடுக்கவும், பணம் போடவும் இரண்டு ஏ.டி.எம்., மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.இரண்டு மெஷின்களும், மிகவும் அருகில் இருப்பதால், இங்கு வரும் வாடிக்கையாளர்கள், ஒருவரை ஒருவர் ஒட்டி நின்று, பணம் எடுக்கின்றனர். சில இடங்களில் காசோலை போடும் மெஷினும் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரே நேரத்தில், மூன்று நபர்கள் இடைவெளி இல்லாமல், உள்ளே நிற்கின்றனர். ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது அங்கு கழிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி கூட வழங்குவதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி மேலாளர்களிடம் கேட்ட போது, 'ஏற்கனவே நிறுவப்பட்ட மெஷின்களை, இதற்காக மாற்றியமைக்க முடியாது. வாடிக்கையாளர்கள்தான், விழிப்புணர்வுடன் ஒருவர் பின் ஒருவராக சென்று, பணம் எடுக்க வேண்டும்' என்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், ஏ.டி.எம்.,களில் சமூக இடைவெளியை முறைப்படுத்த, செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும்.
குறைந்தபட்சம், கிருமிநாசினியாவது ஏ.டி.எம்.,களில் வைக்க வங்கி நிர்வாகங்களுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.ஒரே நேரத்தில், மூன்று நபர்கள் இடைவெளி இல்லாமல், உள்ளே நிற்கின்றனர். ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது அங்கு கழிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி கூட வழங்குவதில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அடுத்தவன் தொட்டுத்தர ரூவா நோட்டாலேயும்.பரவும். ஏ.டி.எம் மூலமாவும் பரவும். தப்பிச்சுக்கறது ஒங்க கையிலதான் இருக்குன்னு நிபுணர்கள் சொல்லிட்டாங்கோ...

Advertisement