Advertisement

30 குடிசை தீக்கிரை

Share
பம்மல், :சென்னை, பம்மலை அடுத்த திருநீர்மலையில், சென்னை புறவழிச்சாலை அணுகுசாலையை ஒட்டியுள்ள இடத்தில், 30 குடிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.புறநகர் பகுதிகளில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர்.கொரோனா பரவல் காரணமாக, அவர்கள் அனைவரும், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று மதியம், குடிசைகள் தீப்பிடித்து எரிய துவங்கின. சற்று நேரத்தில், மளமளவென பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், அனைத்து குடிசைகளும் எரிந்து நாசமாயின. குடிசைகளை யாராவது தீ வைத்து கொளுத்தினரா என, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement