Advertisement

சென்னையில் மீண்டும் பராமரிப்பு மின் தடை

Share
சென்னைசென்னை மற்றும் புறநகரில், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், நாளை முதல் பராமரிப்பு பணிக்கான மின் தடை செய்யப்பட உள்ளது.துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களில், எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன. அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகளை, மின் ஊழியர்கள் செய்கின்றனர். அந்த பணி நடக்கும் இடங்களில், காலை முதல் மதியம் வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.இந்த விபரம், மக்களுக்கு, மின் வாரியம் சார்பில், முன்கூட்டியே தெரிவிக்கப்படும். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சில இடங்களில், ஜூன், 19 முதல், இம்மாதம், 5 வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், மக்கள் வீடுகளில் முடங்கியதால், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதற்காக, ஜூன், 20 முதல் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. திங்கள் முதல், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை முதல், மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகளை, மின் வாரியம், மீண்டும் துவக்க உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement