Advertisement

காவு வாங்க, உசுர காப்பாத்திக்க, முக கவசம்

Share
நான்கு மாதங்களாக, உலகையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். பல லட்சம் உயிர்களை அது காவு வாங்க, 'உசுர காப்பாத்திக்க, முக கவசம் அணிவது மட்டும் தான் தீர்வு' என, உலக சுகாதார நிறுவனம் முதல், உள்ளூர் அரசாங்கம் வரை, கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால், என்ன நடந்தால் எனக்கென்ன என்பது போல, சென்னையில் இன்னும் இவர்களை போல பலர், பொது இடங்களிலும், சாலைகளிலும், முக கவசம் அணியாமலும், வைரஸ் நுழையும் வழிகளான மூக்கையும், வாயையும் மட்டும் மூடாமல், கழுத்து, கீழ் தாடைக்கு கவசம் அணிந்து கொண்டும் செல்வதை காண முடிகிறது. இது போன்ற பேர்வழிகள் திருந்தினால் மட்டுமே, கொரோனா இந்த உலகத்தை விட்டு அகலும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement