Advertisement

உதவி பொறியாளர் அதிரடி, சஸ்பெண்ட்

Share
சென்னை களப்பணிக்கு வந்த கல்லுாரி மாணவியிடம், காதல் வசனம் பேசிய மாநகராட்சி உதவி பொறியாளர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60வது வார்டு உதவி பொறியாளர் கமலகண்ணன். இவர், கொரோனா களப்பணிக்கு வந்த, 19 வயது கல்லுாரி மாணவியிடம், போனில், காதல் வசனம் பேசி, தொந்தரவு செய்யும் ஆடியோ, நேற்று முன்தினம் வெளியானது.இது குறித்து, மாணவி தரப்பில், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, பின் திரும்ப பெறப்பட்டது.இருப்பினும், ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகாருக்கு ஆளான உதவி பொறியாளரை, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.இது குறித்து, துறை ரீதியான விசாரணை தொடரும் என, கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement