Advertisement

நல்லது பண்றீங்க...: சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு

Share
சென்னை; சித்தா டாக்டர் வீரபாபுவை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி, 'மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க...' என, பாராட்டி உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, தமிழக அரசு பரிந்துரைத்தது.

நல்ல வரவேற்புஇதுதவிர, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு, தனித்த சித்தா சிகிச்சை அளிக்க, மாநகராட்சி சிறப்பு மையத்தையும் அமைத்துள்ளது. இங்கு, டாக்டர் வீரபாபு குழுவினர், ஆவி பிடித்தல், சூரிய குளியல், மூலிகை தேநீர், சித்தா உணவுகளை வழங்கி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முகாமில், சிகிச்சை முடிந்து, இதுவரை, 550 பேர், நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஜினி பாராட்டுஇந்நிலையில், நடிகர் ரஜினி, நேற்று மாலை, சித்தா டாக்டர் வீரபாபுவை, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, 'உங்களது சேவை சார்ந்த செய்திகளை தொடர்ந்து பார்த்து, படித்து வருகிறேன். கொரோனா பாதிப்பு நேரத்தில், மக்களுக்கு நல்லது செய்து வருகிறீர்கள். உங்களோட செயல்பாடுகள் ரொம்ப மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்; ஊரடங்கு முடிந்ததும், நாம் சந்திப்போம்' என்று பேசி, பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து, டாக்டர் வீரபாபு கூறுகையில், ''நடிகர் ரஜினியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன், தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணி தொடரும்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (22 + 4)

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  எல்லாம் வல்ல முருகனின் பெயர் வைத்திய நாதன் என்பது. பதினெட்டு சித்தர்களும் அவன் அருளால், தீராத நோய்களுக்கு மருந்து வழங்கி உள்ளனர்.

 • Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ

  சித்த மருத்துவ முறையை ஒளித்து கட்டியது திராவிடர் கழகத்தின் சாதனை அதில் 'சித்தர்கள்' என்ற வார்த்தை இருக்காம் - அது மூட நம்பிக்கையாம் ஆங்கிலேய படிப்பு, மருந்து, ஸ்டைல், எல்லாம் தான் ஒஸ்தி என்று ஒரு கும்பல் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி ஆயுர்வேதம், சித்த, யுனானி, ஹோமியோபதி, யோகா சிகிச்சைகளை குழிதோண்டி புதைத்தது மக்கள் இவர்களுக்கு குழி தோன்றா விட்டால் அவர் அவர்கள் தலையில் மண்ணை போட்டுக்க வேண்டியதுதான்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அய்யே பார்க்கவே பயமாக இருக்கு

 • R.Selvaperumal - kuwait,குவைத்

  தலைவருக்கு என்னிக்குமே தங்கமான மனசுதான் .......மனிதன்

 • S. Narayanan - Chennai,இந்தியா

  அப்படிப்பட்ட சித்த மருத்துவ முகாமை சென்னையில் நிறைய இடத்தில அமைத்து மக்களுக்கு அரசு சேவை செய்து இருக்கலாமே.

சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு (4)

 • Venki - BANGALORE,இந்தியா

  அரசு இன்னும் மற்ற மாவட்டங்களுக்கும், சித்த மருத்துவ முறை சிகிச்சையை எடுத்து செல்ல வேண்டும்

 • Darmavan - Chennai,இந்தியா

  இதே போன்று சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் ஆட்சேபிக்கவில்லை..அவர் மருந்தை ஏன் முயற்சி செய்யவில்லை, எத்தனையோ பேர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்

  • shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்

   well said

 • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

  தமிழக அரசு இவரை ஊக்குவித்து போதிய நிதியும் அளித்தால் மக்களுக்கு நலம். வாழ்க வளமுடன்

Advertisement