Advertisement

தன் வினை தன்னைச்சுடும்: சிக்கலில் சீன ராணுவம்

Share
லடாக்: லடாக் எல்லையில், கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், சீன ராணுவத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை ஆக்கிரமிக்க, சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த, மே மாதம், எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில் ஒடும் கல்வான் ஆற்றின் கரையில், படைகளை, சீனா குவித்தது. இதையடுத்து, லடாக் எல்லையில், இந்தியாவும், ராணுவத்தை நிறுத்தியது.

கடந்த, மாதம், 15ம் தேதி, சீன ராணுவம் அத்துமீறிய போது நடந்த மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. ஆனால், கல்வான் பகுதியில் இருந்து, படைகளை சீனா இன்னும் வாபஸ் பெறவில்லை. குறிப்பாக, கல்வான் பகுதியில் நான்கு இடங்களில், சீனா, படைகளை குவித்துள்ளது. மேலும், எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை ஒட்டி, கட்டுமானங்களை சீனா மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும், ஆற்றில் பனி கட்டிகள் அதிகளவில் வருகின்றன. இந்த நதி கரையை ஒட்டியே, சீன படையினர் முகாமிட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் தாக்குப்பிடிக்க முடியாமல், சீன படையினர் திகைப்படைந்துள்ளனர். இதனால், சீன படையினர் வாபஸ் பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி செய்த ஆக்கிரமிப்பு, நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளதாக, சீனாவில் சர்ச்சை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

  • sridhar - Chennai,இந்தியா

    சீநா வெற்றிகரமாக ராஜதந்திரத்துடன் பின்வாங்கியது , India ஏமார்ந்தது, தோற்றது என்று சொல்ல இங்கே அருணங்களும் சுந்தரவல்லிகளும் இருக்கிறார்கள். இவங்களை அறிவாளிகள் என்று நினைக்கும் அடிமுட்டாள்களும் உண்டு.

  • vnatarajan - chennai,இந்தியா

    ஆற்றில் வெள்ளம் வற்றியவுடன் சீன ராணுவம் திரும்பவும் ஆற்று கரை ஓரமாக டென்ட் அடிப்பார்கள். ஆகையால் இவர்கள் பதுங்கும் புலிபோன்றவர்கள். ஆகையால் சீன ராணுவத்தை நம்பாமல் நம்து ராணுவம் இனிமேல்தான் மிகவும் அலெர்ட்டாக இருக்கவேண்டும்

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அவர்களுக்கு இவர்கள் அவர்கள் சார்பாக இங்கு இருக்கிறார்கள் என்ற துணிவால்தான் இப்படி நடந்து கொண்டார்கள், இங்கு இவர்களின் கொட்டத்தை அடக்கினால் எல்லாமே சரியாகும், ஆனால் நம்மவர்கள் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம், அப்படியே எடுத்தாலும் அவர்கள் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள், வந்தே மாதரம்

    • JSS - Nassau,பெர்முடா

      santhegameyillai

  • S. Narayanan - Chennai,இந்தியா

    அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இதுதான் நல்ல தருணம், விட்டதை பிடிக்கவேண்டும்.

    • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

      நல்ல ஐடியான்னே உடுறதுக்கு காங்கிரசு கூட்டணி அரசு உட்டதை பிடிக்க பிஜேபி கூட்டணி அரசு உட்டதை பிடிச்சாலும் மோடி ஒயிக

    • Ray - Chennai,இந்தியா

      @வெற்றிக்கொடிகட்டு POK வை மீட்போம்னு சூளுரைத்தது யாருங்க?

Advertisement