Advertisement

சென்னையில் 236 பேரின் மரணங்கள் மறைப்பு; ஆய்வுக்குழு அறிக்கை

Share
சென்னை: சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த 236 பேர் விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக ஆய்வு குழுவினர் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

குற்றச்சாட்டு:



சென்னையில் நேற்று முன்தினம் வரை 1033 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 20 முதல் 30 பேர் மரணம் அடைகின்றனர். இந்நிலையில் மார்ச் முதல் ஜூன் வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 300க்கும் மேற்பட்டோர் குறித்த விபரங்களை மாநகராட்சி மறைந்துள்ளதாக சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்து இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆராய பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனர் வடிவேலன் தலைமையில் டாக்டர்கள் குழுநியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தி முதற்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர்.கொரோனா இறப்புஅதில் கொரோனா அறிகுறியுடன் இறந்த 236 பேர் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் 'சென்னையில் கொரோனா இறப்பு பதிவில் இல்லாத 236 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சந்தேக மரண பட்டியலில் உள்ளனர். ஆய்வறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின் வெளியிடப்படும்' என்றனர்.

ஆய்வு குழுவினர் கூறுகையில் 'அரசிடம் முதற்கட்ட ஆய்வறிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் மருத்துவ அறிக்கை ஆராயப்பட்டு வருகிறது. அவர்கள் கொரோனாவால் இறந்தார்களா என்பது உறுதி செய்யப்பட்டு ஓரிரு நாளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • S. Narayanan - Chennai,இந்தியா

    மிகவும் குறைவாக கூறுவது போல தோன்றுகிறது.

  • David -

    236 மட்டும் தானா???

  • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

    இது ஏன் நடக்கிறது? வெளிப்படை தன்மைதான் மக்களின் மனதில் மரியாதையை ஏற்படுத்திடும்

  • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

    கொரானா சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு மாநிலத்தையும் பார்க்கச் சொல்லும் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஏன் மேற்கு வங்காளம் மாநிலத்தை பார்க்கச் சொல்லவில்லை. முக்கியமாக நமது மையம் தலைவர்

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கொரோனா என்ற தொற்று நோய்க்கு மருந்துகள் /வழிமுறை இல்லாத பட்சத்தில் மரணங்கள் ஏற்படுகிறது மருந்து இருந்து குணப்படுத்த வில்லை என்றால் அரசை மட்டும் குறை சொல்லலாம்??? பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நோய் வந்து விட்டது என்று புலம்பி பயன் இல்லை??இத்தனை வருடம் நம்மால் ஏதோ ஒரு காரணத்தால் நம்ம உடம்பில் ஏற்பட்டுள்ள உபாதைகளும் இந்த கொரோனாவிற்கு மேலும் சாதகமாக அமைகிறது??

Advertisement