Advertisement

பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல்

Share
பீஜிங்: பூடானுடன் எல்லைப் பிரச்னை உள்ளதாக, சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
லடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக, சீனா முதல்முறையாக தெரிவித்துள்ளது.
இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா - பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. அதனால். பூடானுடன் எல்லை பிரச்னை,நீண்டகாலமாக உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 1984 முதல், 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனாவும், பூடானும் பேச்சு நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை, சீனா வைத்துள்ளது. இந்த பிரச்னையில், மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; சீனாவை குற்றம்சாட்டவும் உரிமையில்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    மூன்றாவது, நான்காவது நாடுகள் தலையிட்டால் தான் இந்த சிறிய பூடான் நாட்டிற்கு அமைதி வரும், நீதி கிடைக்கும்.. இந்த குரங்கு எல்லா நாடுகளிலும் அதிரசத்தை பங்குபோட துடிக்கிறது.

  • vnatarajan - chennai,இந்தியா

    இந்திய கம்யூனிஸ்ட்டுகள் சீனாவின் நடவடிக்கைகளைப்பற்றி வாய் திரப்பதில்லையே .அது ஏன் . .

    • madhavan rajan - trichy,இந்தியா

      when they do not get money from alliance partners like DMK, only China communist party will be funding their naxalite activities to cause disturbance in our country. Only when opportunity comes to criticize BJP they will comment vehemently. Otherwise, they will sleep over any matter as if nothing has happened.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    சீனாவிற்கு என்று தனியாக எல்லை என்று இருப்பதால் தான் எங்கும் பிரச்சினை இருக்கிறது. எல்லை என்ற ஒன்றே இல்லாமல் செய்து விடவேண்டும் அவர்களை.

  • Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்

    சீனாவின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பது உண்மை. நேற்று சீனர்கள் வலடிவோஸ்டோகும் தங்களது சொந்தமே என்று கூறி இருக்கிறார்கள். இதனால் ரஷியாவும் எதிரி ஆவதற்கு வித்து இட்டு இருக்கிறார்கள்.

  • RajanRajan - kerala,இந்தியா

    சீனாவின் அழிவு காலம் துவங்கி விட்டது. இயற்கை தன் வலிய கரங்களால் சீனாவை சீண்டும் போது அங்கு எதுவும் மிஞ்சாது.

Advertisement