Advertisement

கன்டெய்னரில் மதுபாட்டில் கடத்திய நால்வர் கைது

Share
திருவொற்றியூர்: கன்டெய்னர் லாரியில் மதுபானம் கடத்தி, டெம்போ டிராவலரில் வைத்து விற்பனை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 540 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை, கொருக்குப்பேட்டை, கண்ணன் சாலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக, கொருக்குப்பேட்டை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், டெம்போ டிராவலரில் பதுக்கி, மதுபானம் விற்ற, சேது, 36, என்பவரை கைது செய்து, 480 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும், 10 பீர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் மற்றும் அத்திப்பட்டு பகுதியில், மதுபாட்டில்களை வாங்கி, கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்து, டெம்போ டிராவலரில் பதுக்கி விற்றது தெரியவந்தது.கைதானவர் கொடுத்த தகவல்படி, மதுபாட்டில்களை கடத்த உதவிய, மோகன்ராஜ், 38, கார்த்திக், 32, ஆகியோரை, கைது செய்து, கன்டெய்னர் லாரியையும், பறிமுதல் செய்தனர்.அதே போல், திருவொற்றியூரில், பார் நடத்தி வரும், கமலக்கண்ணன், 38, என்பவர், காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த போது, வாகன சோதனையில் பிடிபட்டார்.திருவொற்றியூர் போலீசார் அவரை கைது செய்து, 50 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, மதுபாட்டில்களை வாங்கி, கடத்தி வந்து விற்றது தெரிய வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement