Advertisement

விஜய் வீட்டிற்கு குண்டு மிரட்டல் மரக்காணம் வாலிபர் சிக்கினார்

Share
சென்னை: நடிகர் விஜய் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், விருகம்பாக்கத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார்.இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், சாலிகிராமம், பாஸ்கர் காலனியில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், விருகம்பாக்கம் போலீசாருடன் சென்று, சோதனை செய்தனர். நீண்ட சோதனைக்குப் பின், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது புரளி என, தெரிய வந்தது. அதே நேரம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பேசிய மொபைல் போன் எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், மிரட்டல் விடுத்தது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர், 22 என, தெரிய வந்தது.சென்னை போலீசார் தகவல் படி, மரக்காணம் போலீசார், அந்த நபரை கைது செய்தனர். இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.ஏற்கனவே, முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, கைது செய்யப்பட்டவர் என, போலீசார் தெரிவித்தனர்.வெடிகுண்டு மிரட்டல்விடுத்த நபரை கைது செய்ய, விருகம்பாக்கம் போலீசார், மரக்காணம் சென்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement