dinamalar telegram
Advertisement

ரூ.2 கோடி மயான நிலம் ஆக்கிரமிப்பு?

Share
தாம்பரம்,: தாம்பரம் அருகே, ௨ கோடி ரூபாய் மதிப்பிலான, மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அகற்றாமல், வருவாய்த் துறை அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக, புகார் எழுந்துள்ளது.சென்னை, தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான, 1 ஏக்கர், 80 சென்ட் மயான நிலம் உள்ளது.இதை, ஊராட்சியின் காந்தி நகர், மேகலா நகர், இந்திரா நகர் உட்பட, 10க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர்.இதில், 7 அடி உயரம், 30 அடி நீளத்தில் ஒரு சுற்றுச்சுவரும், 40 அடி நீளம், 6 அடி உயரத்தில் ஒரு சுற்றுச்சுவரும் கொண்ட இரண்டு வீடுகள் என, 15 சென்ட் பரப்பளவிற்கு, ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன.கடந்த, 2018 முதல் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அகற்றாமல், வருவாய்த் துறை அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த, வெங்கடேசன், 55, கூறியதாவது:ஆக்கிரமிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்படும் முன்பே, அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டருக்கு, புகார் அளிக்கப்பட்டது.அந்த புகார், தாம்பரம் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட பின், கிராம நிர்வாக அலுவலர், இடத்தை ஆய்வு செய்தார்; ஆனால், நடவடிக்கை இல்லை.அதேநேரம், 'வர்தா' புயலில் சேதமடைந்த மயானத்தை சீரமைக்க, 2019, ஜனவரியில், ஒப்பந்தம் விடப்பட்டது.ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், அப்பணிகளும் நடக்கவில்லை. இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில், சிக்கல் எழுந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Indhuindian - Chennai,இந்தியா

    சுடுகாட்டில் தேவை ஆறடி நிலம்தான் அப்போ ஏன் மொத்தயம் ஆக்கிரமிக்கணும் தனக்கும் குடும்பத்துக்கும் தேவையானதை மட்டும் ஆட்டைய போட்டா போதாதா

Advertisement