dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
தி.மு.க., முன்னாள் அமைச்சர், சாத்துார் ராமச்சந்திரன்: மாவட்ட செயலர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில், பதவி கொடுத்தவர்களுக்கு, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்றி செலுத்தட்டும். தேவையின்றி, ஸ்டாலினை விமர்சிக்கிறார்; புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.

'டவுட்' தனபாலு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்ந்து உள்ள விருதுநகர் தொகுதியை சேர்ந்தவர் நீங்கள் என்பதால், அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள் என்பதில், யாருக்கும், 'டவுட்' வராது. எனினும், தி.மு.க.,வில், ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதியும் தானே, அறிக்கை வெளியிடுவர்; நீங்களும் விட்டுள்ளீர்களே... அது தான் ஆச்சர்யமாக உள்ளது!

***
த.மா.கா., தலைவர் வாசன்: நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்களுக்கு உற்சாகமூட்டுவது, பாதிப்புக்கு உள்ளான வீரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருவது, தேசத்தின் உறுதிப்பாட்டை உலகுக்கு உணர்த்துவது, தமிழின் பெருமையை பறைசாற்றுவது என்ற, நான்கு நல்ல செய்திகளை உலகுக்கு அளித்த, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.

'டவுட்' தனபாலு: பிரதமர் மோடியின் லடாக் வீராவேச உரையை பாராட்டிய, தமிழக அரசியல் தலைவர், நீங்கள் ஒருவராகத் தான் இருப்பீர்கள். இதன் மூலம், நாட்டின் நலன் தான், உங்களுக்கு பெரிது என்பதை, சக கட்சித் தலைவர்களுக்கு, பட்டும் படாமலும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள் என்பதில், அவர்களுக்கு இனிமேல், 'டவுட்' இருக்காது!

***
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்: 'தமிழகத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்து விட்டது' எனக் கூறும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், குணம் அடைந்தோர் எண்ணிக்கையை மறைத்து, மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார். தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை, 42 ஆயிரத்து, 955 மட்டுமே.

'டவுட்' தனபாலு: 'இதுவரை தொற்று பாதித்தவர்கள்' என்ற தலைப்பில் தான், உலக அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தினமும், லட்சக்கணக்கில், அரசு சார்பில், எண்ணிக்கை பகிரப்படுகிறது. அதைத் தான், ஸ்டாலினும் சொல்லி இருப்பார். அவர் மீது கோபம் கொள்வது நியாயம் தானா என்ற, 'டவுட்' வருகிறது. எனவே, முதலில், மருத்துவமனைகளில், வீடுகளில் தனிமையில் உள்ள தொற்றாளர்கள் பட்டியலை வெளியிடலாமே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

    இனி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிடும் போது தனித்தனியாக தொற்று உள்ளவர்கள்(active cases) குணமடைத்தவர்கள் தொற்று காரணமாக இறந்தவர்கள் என்று கூறலாமே ...இதனால் மக்களுக்கு அச்சம் குறையும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அன்றாட நாளிதழ்களில் உலகளவில், நாட்டில், மாநில அளவிலான தொற்று விவரம் வருகிறது. அதில் த. நா. லட்சத்தைத் தாண்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை கூறுவதால் என்ன தவறாகிவிட்டது ?

Advertisement