Advertisement

ஊழியர்களுக்கு தொற்று அம்மா உணவகம் மூடல்

Share
கிண்டி :நான்கு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, ஈக்காடுதாங்கல், 'அம்மா' உணவகம் மூடப்பட்டது.அடையாறு மண்டலம், 170வது வார்டு, கிண்டி, நாகிரெட்டி தோட்டம் பகுதியில், 52 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 12 பேருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது.இதில், நான்கு பேர், ஈக்காடுதாங்கல் அம்மா உணவகத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள், மருத்துவமனை மற்றும் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.இதையடுத்து, அம்மா உணவகம் நேற்று மூடப்பட்டது. உணவகம் திறக்கும் வரை, ஈக்காடுதாங்கல் பகுதி மக்கள், கிண்டி தொழிற்பேட்டை வளாக அம்மா உணவகத்தை பயன்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.இந்நிலையில், அம்மா உணவக ஊழியர்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டால், மற்ற உணவகங்களையும் மூடும் நிலை ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.போஸ்டர்//
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement