Advertisement

வாளையாரில் தவித்த 76 பேர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு

Share
மதுக்கரை: கோவை அருகே உள்ள வாளையாரில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 76 பேர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தமிழக - கேரள மாநில எல்லையான வாளையாருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 28) சுற்றுலா வாகனங்களில், 76 பேர் வந்தனர். தமிழக வருவாய் துறையினர் விசாரித்தபோது, சார்ஜாவில் இருந்து வந்ததும், அவர்களிடம் 'இ- பாஸ்' இல்லாததும் தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் கூறுகையில், ''சார்ஜாவில் இருந்து கொச்சி வந்தோம். அங்கிருந்து, வேனில் வாளையார் வந்தபின், அதிகாரிகள், 'இ- பாஸ்' கேட்டனர். விமான டிக்கெட் பதிவு செய்த ஏஜன்டுகள், எங்களை வீடு வரை கொண்டு போய் விட, வாகன அனுமதி பெற்றுள்ளதாக கூறி அனுப்பினர். நேற்று (நேற்று முன்தினம்) மாலை முதல் இங்கு சாப்பிடக்கூட வழியின்றி, சொந்த மண்ணில் அகதிகள் போல நிற்கிறோம்,'' என்றனர்.
கோவை மதுக்கரை தாசில்தார் சரண்யா கூறுகையில், ''சார்ஜாவிலிருந்து வந்தவர்கள் உரிய அனுமதி பெறவில்லை. விமான பயணத்துக்கான ஏஜன்டால் ஏமாற்றப்பட்டுள்ளனர். கோவை கலெக்டரிடம் பேசி, அவரவர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வீடுகளில் தனிமைப்படுத்துவதற்காக, சான்றும் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • dina - chennai,இந்தியா

    இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் மாவட்ட உதவும் ஆட்சியாளர்கள் நிஜமாக கடவுளாக தெரிவார்கள்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அவனவன் தானே சட்டம் எழுதிக்கொள்வான். இதுதான் இந்தியாவின் தலை எழுத்து.

  • OUTSPOKEN - CHENNAI,இந்தியா

    உடனடி ஏற்பாடுகளை செய்த அதிகாரிகளுக்கு நன்றி

  • Vairam - Madurai,இந்தியா

    test

  • Ray - Chennai,இந்தியா

    இன்று யார் என்ன சொன்னாலும் அதுவே சட்டம் அதுவே விதி தீர்ப்புகள் திருத்தப் படலாம்

Advertisement