Advertisement

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வேண்டும்! சென்னையை பின்பற்றி மதுரைக்கும்..

Share
மதுரை: சென்னை, செங்கல்பட்டை பின்பற்றி மதுரையிலும் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனாவிற்கென்று தனி சிகிச்சை, மருந்து, தடுப்பூசி இல்லை. சில ஆய்வு நுணுக்கங்கள் அடிப்படையில் அலோபதி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுஷ் மருத்துவ முறைகளாலும் பலன் கிடைக்கிறது. குறிப்பாக சித்த மருத்துவத்தால் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது.

இதனால் சென்னையில் 6 மையங்கள், செங்கல்பட்டில் ஒரு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் சித்த மருத்துவ சிகிச்சையளிக்க அரசும் ஒப்புதல் அளித்தது. அங்கு அறிகுறியின்றி, மிதமான அறிகுறிகளுடன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இச்சிகிச்சை முறைக்கு மதுரையிலும் அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் 300 சித்த மருத்துவர்கள் வரை உள்ளனர். லேசான, மிதமான பாதிப்புள்ளோரை இவர்களிடம் ஒப்படைக்கலாம்.

இதற்காக தனி முகாம்களை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.4 நாளில் குணப்படுத்தலாம்செங்கல்பட்டு சித்தமருத்துவக் கல்லுாரி முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவக்குழுவில் மதுரை சித்த மருத்துவமனை மற்றும் கிளினிக் சங்க தலைவர் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் இடம்பெற்றிருந்தார்.

அவர் கூறுகையில், 'லேசான, மிதமான பாதிப்புள்ளோரை மிகத்துரிதமாக சித்தமருத்துவத்தில் குணப்படுத்தலாம். நாங்கள் சிகிச்சையளித்த நோயாளிகளுக்கு 4வது நாள் பரிசோதனையிலேயே 'நெகட்டிவ்' என முடிவு கிடைத்தது. எனவே லேசான, மிதமான பாதிப்புள்ளோருக்கு சித்தா, ஆயுஷ் கூட்டு சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும். எனது கோகிலா மருத்துவமனையில் மட்டும் 20 படுக்கைகள் உள்ளன.

நான் நோயாளாளிகளை கவனிக்க தயாராக உள்ளேன். இப்படி சித்த மருத்துவர்களிடம் நோயாளிகளை ஒப்படைப்பதன் மூலம், தீவிர பாதிப்புள்ளோரை அரசு மருத்துவமனையில் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இறப்புகள் இல்லாமல் ஆக்கலாம். நோயாளிகளும் விரைவில் வீடு திரும்புவர். அரசின் சுமையும் குறையும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • P Subramanian - Chennai,இந்தியா

    Not only to Madurai. Siddha treatment should be extended to entire Tamil Nadu. The curing time is very short in Siddha. In allopathy, it takes an average of 14 days even for mild symptomatic patients. In siddha , it takes only 5 days for mild and 7 to 8 days for severe symptomatic patients. Also compared to the cost in Allopathy, Siddha is cheaper. Also Government should distribute Kabasura Kudineer through ration shops for prevention. If government is serious about Corona, it should give more importance to Siddha.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    முயற்சிக்கலாமே தவறில்லை

Advertisement