Advertisement

ஓ.எம்.ஆரில் மார்க்கெட்? இடம் தேடும் சி.எம்.டி.ஏ.,

Share
சென்னை : கொரோனா பரவல் காரணமாக மே, 5ல் கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டது. இதன் பின், திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டது.

இந்த வளாகத்தில், 200 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில வாரங்களாக மழை பெய்து வருவதால், திருமழிசை தற்காலிக சந்தை வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இத்தகைய சூழலில், இங்கு காய்கறி விற்பனை தொடர்ந்தால், அது சுகாதார ரீதியாக புதிய பிரச்னைகளை உருவாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், இதற்கு மாற்றாக புதிய இடம் தேர்வு செய்யும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவங்கியுள்ளது.

தலைமை செயலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், இதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் சில இடங்களை சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த இடங்கள், அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், பழைய மாமல்லபுரம் சாலையில், கேளம்பாக்கம் -- திருப்போரூர் இடையே இடம் தேடும் பணிகள் துவங்கியுள்ளன.

நகருக்கு வெளியில் மூன்று இடங்களை தேர்ந்தெடுத்து, காய்கறி வினியோகம் மேற்கொள்வது குறித்து, அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.இது குறித்த முக்கிய முடிவுகள், அடுத்த சில நாட்களில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement