Advertisement

ஹாட் ஸ்பாட் ஆன ஆவடி; தொற்று தினமும் அதிகரிப்பு

Share
ஆவடி : ஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 6 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்., 4ம் தேதி, டில்லி சென்று திரும்பிய, ஆவடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முதியவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.

அதைத் தொடர்ந்து, தினமும் ஒருவர், இருவர் என, துவக்கத்தில், 37 நாட்களில், 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.ஆனால், தற்போது, சென்னையின் மற்ற பகுதிகளை போல், ஆவடியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.ஆவடி மாநகராட்சி பகுதியில், கடந்த இரண்டு வாரங்களாக, தினமும், 20க்கும் மேற்பட்டோர், தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 640ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி, 22 பேர் உயிரிழந்தனர்.

மேலும், ஆவடி பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் தகவல்கள், மாநகராட்சிக்கு சரிவர கிடைப்பதில்லை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதனால், நோய்த் தொற்றுக்கு பிந்தைய நடவடிக்கையில், அதிகாரிகளால் சரிவர ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னைக்கு, சுகாதார அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement