Advertisement

ஊரடங்கிலும் சிட்லபாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி

Share
சிட்லபாக்கம் : முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிட்லபாக்கம் ஏரியில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள், சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.

சென்னை, தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பெரிய ஏரி, பொதுப்பணித் துறை பராமரிப்பில், 200 ஏக்கரில் உள்ளது.ஆக்கிரமிப்பு போக, தற்போது ஏரியின் பரப்பு, 95 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி உள்ளது.நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம் ; நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழில், 2019 ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்பின், ஏரியை, 2019 ஜூன், 22ல் பொது நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் இணைந்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து, 'சிட்லபாக்கம் ஏரி, 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்' என, ௨௦௧௯ ஜூலை, 5ல், முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார்.தொடர்ந்து, நலச்சங்கங்கள் சார்பில், ஏரிக்குள் திறந்தவெளி திரையரங்கம், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

ஏரிக்கரையில் உள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க, நீர்தெளிப்பான்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய திட்ட அறிக்கையை, பொதுப்பணித் துறையிடம் வழங்கினர்.இதில், சிலவற்றை பரிசீலித்த அதிகாரிகள், மொத்தமாக, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, முடிவு செய்தனர்.திட்டப்படி, ஏரியின் கிழக்கு புறத்தில் இருந்து, 2,500 அடி நீளத்திற்கு, 'பேவர் பிளாக்' கற்களுடன் கூடிய, 15 அடி அகல நடைபாதை அமைக்கப்பட உள்ளது.இதற்கு, மின் விளக்குகளும் பொருத்தப்பட உள்ளன. கிழக்கு பகுதியின் உட்புறத்தில், கரை உடையாமல் இருக்க, கான்கிரீட் கற்கள் பொருத்தப்பட உள்ளன.

ஏரிக்குள் உள்ள வண்டல் மண்ணை, 3 முதல், 4 அடி ஆழத்திற்கு எடுக்கப்பட உள்ளது.ஏரிக்கு நீர்வரத்து சீராக இருக்கவும், உபரி நீரை சிக்கலின்றி வெளியேற்றவும், தலா, இரண்டு கதவுகள் அமைக்கப்பட உள்ளன.கழிவு நீர் கலப்பதை தடுக்க, மேற்கு பகுதியில், தடுப்புக் கால்வாய் அமைத்து, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது.அதேபோல், சிட்லபாக்கம் ஏரியை, செம்பாக்கம் ஏரியுடன் இணைக்கும் வகையில், பாதாள மூடு கால்வாய் அமைய உள்ளது.

ஏரியின் வடக்கு பகுதியில், பூங்காவும் அமைய உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முதல்கட்ட ஊரடங்கு அறிவிப்பின் போது, பணிகள் இடையில் தடைபட்டன.அதன்பின், வேகமெடுக்க துவங்கிய சீரமைப்பு பணிகள், தற்போது முழு ஊரடங்கிலும், மிக தீவிரமாக நடந்து வருகின்றன.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஆர்.பாலச்சந்தர், 30, கூறியதாவது:ஏரிக்குள் தீவு அமைப்பதற்காக, குப்பை கலந்த மண் கொட்டப்பட்டுள்ளது. அதை அகற்றி நல்ல முறையில், தீவு அமைத்து தர, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம்.

அதை, பரிசீலித்த அதிகாரிகள், குப்பை கலந்த மண்ணை அகற்றுவதுடன், ஆழப்படுத்துவதற்காக, ஏரிக்குள் இருந்து எடுக்கப்படும், சுத்தமான வண்டல் மண்ணை வைத்தே, தீவு அமைத்து தருவதாக, உறுதி அளித்துள்ளனர்.சுற்றுச்சூழல் பூங்கா அமைத்த பின், ஏரியை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement