Advertisement

இன்றைய (ஜூன் 30) விலை: பெட்ரோல் ரூ.83.63; டீசல் ரூ.77.72

Share
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 30), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், இம்மாதம், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர், 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று, விலையில் மாற்றமின்றி, பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement