Advertisement

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Share
புதுடில்லி; பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூன் 30) மாலை, 4:00 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

நாட்டில், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், இந்திய - சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இது, நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரண்டு பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4:00 மணிக்கு, நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். இந்த தகவலை, பிரதமர் அலுவலகம், 'டுவிட்டர்' மூலம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7 + 7)

 • Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா

  உத்தராகண்டின் முக்கியக் கோயில் நிதிகளை பாஜக அரசு வசூலிப்பதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தும் சாதுக்கள் இதையும் பாருங்கள்

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  மக்களே ஏமாற்றத்திற்கு தயாராகுங்க

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

  அந்த VIVO VIVO VIVO அதுவும் சீன காரனுடையது தான் kavanipeergala

 • Sathyanarayanan Sathyasekaren -

  70 years those who cheated, looted Hindustan and Thamilnadu are good leaders for these idiots, these fools are angry as they are unable to earn black money like before. so these scoundrels vomit hate against the selfless leader Modiji.

 • Girija - Chennai,இந்தியா

  மாத சம்பளம் பெற்று வந்த மக்களுக்கு தேவை கையில் உடனடி பணம், அதை கடனாக கொடுத்தாலும் தகுந்த சான்றிதழை கொடுத்து ஏற்க தயாரக உள்ளனர். குறைந்த பட்சம், தங்கத்தின் மீது வங்கியில் வட்டி இல்லா கடன் கொடுக்க யோசனை செய்யுங்கள், அரசின் கஜானாவிற்கும் வெளியில் இருக்கும் தங்கம் வந்து சேரும். ஒரு "Family Monthly Commitment Flow Chart" மூலம் மக்களின் கஷ்டங்களை முதலில் நீங்கள் உணருங்கள் , அதாவது நாலு மாதம் முன் வரை ஒரு சிறு குடும்பம், குடும்ப தலைவன் மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த நிறுவனம் மூடப்பட்டது, நான்கு மாதமாக சம்பளம் இல்லை, இந்நாள் வரை வேலை இல்லை, வாடகை வீடு , மனைவி , இரன்டு குளந்தைகள், பெற்றோர்கள், இன்றைக்கு கையில் ஒரு ருபாய் கூட இல்லை. அவர்கள் என்ன செய்வர் ? வேலை கொடுத்தால் செய்ய தயார் ஆனால் வேலை இல்லை. குறைந்தபட்சம் தங்கத்தின் பேரில் வட்டியில்லா கடன் கொடுத்து நடுத்தர மக்களை காப்பாற்றுங்கள். அதிகம் கூட வேண்டாம் மாதம் ஒரு நபர் ஒருவருக்கு அதிகபட்சம் பத்தாயிரம் என்று கொடுத்தால் கூட போதும் .

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நல்ல யோசனை, //தங்கத்தின் மீது வங்கியில் வட்டி இல்லா கடன் கொடுக்க யோசனை செய்யுங்கள்,// எங்கள் ஊரிலுள்ள சொந்தக் காரர்கள் வீட்டில் ஒருகுடும்பம் சில மாதங்க்ளாக வாடகை தர முடியவில்லை. ஆனால், அதை நம்பி இருப்பவர்களின் பாடும் இப்போது அவர்களைப்போலத்தான் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடம் உரை (6)

 • ஆப்பு -

  மக்களே தியாகத்திற்கு தயாரா இருங்க...

 • babu -

  ஏறத்தாழ குண்டூசி முதல் பெட்ரோல் வரை விலையை கூட்டி, சம்பளத்தை குறைச்சு(அதிகாரி, தேர்தல் அதிகாரி, ஜட்ஜ், ராணுவ அதிகாரி தவிர்த்து சாமான்ய மக்களுக்கு), அரிசி முதல் எண்ணெய் வரை அந்நிய நாட்டிலிருந்து இறக்கி, அரசு நிறுவனங்களை விற்று பொருளாதாரத்தை அசுரத்தனமா வளத்தாச்சு, அப்புறமும் எதைப்பத்தின அறிவுரையா இருக்கும். மக்களுக்கு?

 • sahayadhas - chennai,இந்தியா

  ஐயா, நாங்கள் சீனா பொருட்களை வெருத்து வருகிறோம் உங்கள் விருப்பம் என்னவென்று சொல்ல வே இல்ல.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சாதனைகளை விளக்கமிட்டு பேசுவார். (கொரோனா ""ஆரம்பத்திலேயே"" உலகறிய தானே அறிவித்துக்கொண்ட சாதனைகள்)

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  காலிப் பெருங்காய டப்பா. வாசனை பலமாத்தான் இருக்கு.

Advertisement