Advertisement

செங்கல்பட்டில் 22 மருத்துவர்கள், 28 போலீசாருக்கு கொரோனா உறுதியானதால் அச்சம்

Share
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 22 மருத்துவர்கள், 28 போலீசார் உட்பட, 187 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏழு பேர், இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 5,051 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 2,650 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், பம்மலில், 67 வயது பெண், பல்லாவரத்தில், 77 வயது ஆண், செங்கல்பட்டில், 69 வயது ஆண் ஆகியோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனாவால் நேற்று இறந்தனர்.

தவிர, சென்னை, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, நான்கு பேர் இறந்தனர். இதுவரை, 87 பேர் இறந்துள்ளனர்.செங்கல்பட்டு - -57, தாம்பரம் - 56, பல்லாவரம் - 41, வண்டலுார் - ஒன்பது, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் - தலா எட்டு, மதுராந்தகம் - ஏழு, செய்யூர் - ஒன்று என, 187 பேர், நேற்று, புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பிற மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் என, மொத்த பாதிப்பு 5,242 ஆக உயர்ந்துள்ளது.

இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள் ஒன்பது பேர், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், 13 பேர் என, 22 மருத்துவர்கள் மற்றும் 28 போலீசாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினரிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் 162



திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, நேற்று முன்தினம், 3,494ஆக இருந்தது. நேற்று, 162 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை, 3,656ஆக உயர்ந்தது.இதுவரை, 2,245 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 66 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 86



காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று புதிதாக, 86 பேருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில் - 16, குன்றத்துார் - 37, ஸ்ரீபெரும்புதுார் - 18, காஞ்சிபுரம் - ஆறு, உத்திரமேரூர் - நான்கு, வாலாஜாபாத் தாலுகாவில் - ஐந்து பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,700 ஆக உயர்ந்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement