Advertisement

18 லட்சம் பார்வையாளரை கவர்ந்த, ஏரியல் வீடியோ

Share
சென்னை: வீட்டில், ஆண்களுக்கு நிகராக பெண்களும், சமமாக கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'ஏரியல்' நிறுவனம் வெளியிட்ட வீடியோவை, 18 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

சலவை சோப்பு மற்றும் பவுடர் தயாரிப்பில், முன்னணியில் உள்ள, 'ஏரியல்' நிறுவனம், ஒவ்வொரு வீட்டிலும், ஆண்களுக்கு நிகராக பெண்களும், சமமாக கருதப்பட வேண்டும் என்பதற்காக, பல விழிப்புணர்வு உரையாடல்களை, 2015 முதல், வெளியிட்டு வருகிறது.இது குறித்து, ஏரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'சலவை என்பது ஒரு பெண்ணின் வேலை மட்டுமா' என்ற, உரையாடல், 2015ல் வெளியானது. 'டேட்ஸ் ஷேர் தி லோட்' என்ற உரையாடல், 2016ல் வெளியிடப்பட்டது.தொடர்ந்து, 2019ல், 'சன்ஸ் ஷேர் தி லோட்' என்ற உரையாடல் வெளியிடப்பட்டது.

இதன் மூலம், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, அவர்களின் வேலைகளை, சுயமாக செய்து கொள்ளும் வகையில், வளர்க்க அறிவுறுத்தப்பட்டனர்.வீட்டில், பெண்களையும், சமமாக பார்க்க வேண்டும் என, ஐந்து ஆண்டுகளாக ஏரியல் எடுத்த முயற்சியால், லட்சக்கணக்கான ஆண்களின் சிந்தனை மற்றும் செயல்திறன் மாறி உள்ளது.அ

தாவது, 2014ல், 79 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2019ல், 41 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொறுப்புகளை, மகன்கள், கணவர்கள் மற்றும் தந்தையர், சமமாக பகிர்ந்து கொள்ள, புதிய வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவில், நெருக்கடி காலங்களில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ஒன்றிணைந்து ஒரு பிரிவாக பணியாற்றுவதுடன், வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன, உள்ளிட்ட கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.இதை, 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், கண்டு ரசித்துள்ளனர்.

இந்த வீடியோவை, https://www.youtube.com/watch?v=KAKvjRMcPU0 என்ற இணைப்பில் காணலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement