Advertisement

சிறுபான்மையின பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

Share
பீஜிங்; அண்டை நாடான சீனாவில், சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில், உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை, அதிகாரிகள் தீவிரப் படுத்தியுள்ளனர்.
முத்திரைசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர்.இவர்களைத் தவிர, வேறு சில சிறுபான்மை இனத்தவரும், இந்த மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகையை குறைப்பதற்கான முயற்சியில், சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாகவே, தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உய்கர் மக்களில் பலரை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, சீன அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதிரடிச் சோதனையும் நடத்தி வருகின்றனர்.எந்த வீட்டிலாவது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு செலுத்த முடியாத அளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்தாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாம்களில் அடைக்கின்றனர். நடவடிக்கைமேலும், திருமணமான சிறுபான்மையின பெண்கள் கர்ப்பமானால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.அந்த பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை பொருத்துவது, மருந்து, மாத்திரை கொடுத்து கருகலைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளிலும் சீன அதிகாரிகள் ஈடுபடுவதாக, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உய்கர் மக்கள் கூறுகையில், 'மூன்று குழந்தைகள் வரை பெறுவதற்கு எங்களுக்கு சீன சட்டம் அனுமதி அளித்துள்ளது. 'ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல், எங்கள் மக்கள் தொகையை குறைப்பதில் தான் கண்ணாக இருக்கின்றனர்' என்கின்றனர். சீன அதிகாரிகள் தரப்பில், 'ஜின்ஜியாங் மாகாணத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதால், வறுமையும், பழமைவாதமும் அதிகரிக்கிறது; இந்த அபாயகரமான போக்கை தடுக்கவே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (73)

 • ocean kadappa india - kadappa,இந்தியா

  பாவாடைகள் குல்லாக்கள் இந்துக்களை மதம் மாற்றுவதில் மிகவும் குறியாக இருப்பவர்கள். பண்ம் புரளும் இந்துக்களை குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள்,.

 • l vijayaraghavan - CHENNAI,இந்தியா

  இந்தியா இந்த விஷயத்தில் இன்னும் தூக்கிக்க கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முன்னால் அறுபது வருடங்கள் வேண்டும் என்றே அலட்சியமாய் இருந்தது ஓட்டுக்காக, பதவி சுகத்துக்காக, கொள்ளை அடிப்பதற்காக. இன்றோ கழுத்தை நெறிக்கும் ஆயிரம் மற்ற பிரச்சினைகள் அரசின் கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இப்படியே விட்டால் இந்துக்கள் சிறுபான்மையினர் அவத்தை யாராலும் தடுக்க முடியாது. அதிலும் திராவிட விஷயங்கள் அந்தப் பணியை விரைவில் முடிக்கப்போகிறார்கள் என்று தோன்றுகிறது.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  பாபர் லெந்து அவுரங்கஸீப் காலம்வரை ஆளவந்த முகலாயர்கள் நம்ம ஹிந்துக்களை எல்லாம் எவ்ளோ சித்ரவதை செய்து கொன்னானுக இன்றும் பல பணக்காரனுக்கு ஒரு சட்டம் சொத்துக்கு பணத்துக்கு மதம் மாறியவனை எல்லாம் நடத்தும் விதம் தெரியுமா ஹிந்துவோ முஸ்லிம்களோ கிறிஸ்துவாளோ ஏழைகள் என்றால் ஒரு நீதி பணக்காரனுக என்றால் ஒருநீதி இருக்கே ஐயா மறுக்கமுடியுமா

 • ocean kadappa india - kadappa,இந்தியா

  நம் நாட்டில் சிறுபான்மை இன மக்கள் பெரும்பான்மையாகி வருகிறார்கள். ஆனால் சீனாவில் சிறுபான்மை மக்கள் மேலும் சிறுபான்மையாக குறைக்கப்படுகிறார்கள்..

 • visu - Pondicherry,இந்தியா

  குடும்ப கட்டுப்பாடு அவசியம் எதிர்கால சந்ததியர்க்கு நிற்க மட்டுமாவது இடம் விட வேண்டும் மத பாகுபாடின்றி அனைவருக்கும் இரெண்டு குழந்தை மட்டுமே என்று கொண்டு வந்தால் மட்டுமே நாடு பிழைக்கும் . இந்தியா விட சீனா நாலு மடங்கு பெரியது மக்கள் தொகை அவர்களை விட 10 20. கோடி மட்டுமே குறைவு.தவிர இப்போதைய சிறுபான்மையினர் இந்தியா மக்கள் தொகையில் 50% தாண்டினால் இந்தியாவை மத சார்பற்ற நாடாக விட்டு வைப்பார்களா என்று யோசிக்க வேண்டும்

Advertisement