Advertisement

சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு

Share
பீஜிங்; சிறப்பு விமானத்தில், இந்தியர்கள் சீனா வருவதற்கு, அந்நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, 'ஏர் இந்தியா' விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. அதுபோல, இந்தியாவில் இருந்தும், ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஜூன், 21ல் இந்திய துாதர்களின் குடும்பத்தினர், பன்னாட்டு வங்கி உயரதிகாரிகள் உள்ளிட்ட, 100 பேர், இந்தியாவில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், சீனாவின் ஷாங்காய் நகர் சென்றனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. அத்துடன், அவர்களுடன் நெருக்கமாக இருந்த, 47 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் வருவோருக்கு, சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதனால், நேற்று பயணியர் இல்லாமல், ஏர் இந்தியா விமானம், சீனாவின் குவாங்சோ சென்று, அங்கிருந்து, 86 பேரை அழைத்து வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    வந்தே பாரத் பத்தி சொன்னது இங்கே ஒரு DECEPTION. சம்பந்தப்பட்ட கூட்டம் சென்றது ஒரு சிறப்பு விமானத்தில் என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது. அதை பற்றி தான் நான் கேள்விகளை கேட்டிருக்கிறேன்.

  • unmaitamil - seoul,தென் கொரியா

    தன்னைப்போல் பிறரையும் "நேசி" என்பது இறைவாக்கு.

  • Anandhi - chennai,அல்ஜீரியா

    ஜஃபிபி

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இவர்கள் அழைத்து செல்லும் அனைவரும் இந்தியர்களா வந்தே பாரத் திட்டத்தில். எதற்காக அவர்களை அழைத்து செல்கிறீர்கள், தாயகம் திரும்புவோருக்காகத்தானே இந்த திட்டம், இந்தியர்களை எதற்கு வேறு நாடுகளுக்கு அழைத்து செல்கிறீர்கள். நாங்கள் தொடர்ந்து எழுதுவது போல இந்த திட்டமானது இந்திய அரசு அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினருக்கு, பெரிய தொழில் முனைவரூக்கு, சினிமா படக்குழுவினருக்கு என்று கார்ப்பரேட் காரர்களுக்கு என்று முக்கியமாக இயக்கப்படுவதாகவே தெரிகிறது. அதில் பெயரளவிற்கு சிலரை அதிர்ஷ்டம் உள்ளோரை அவர்களும் அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதாக இருந்தால் மட்டும் அளித்து வருகிறார்கள். வூஹானில் இருந்து அழைத்து வந்த விமானத்திற்கு பிறகு அனைத்தும் சரியாக செயல்படவில்லை, உண்மையான நோக்கத்தை மறைக்கிறார்களா என்ன? சந்தேகம் வந்து விடுவதற்கு முன்பு சொல்லிவிடலாமல்லவா?

    • madhavan rajan - trichy,இந்தியா

      Those who are brought back from various countries are Indians under Vandhe Bharath. But, while the plane is going to that country any country people willing to go will be taken and ped in that country. That will cover the fuel cost for flying emply while going. While bringing back no other country men will be allowed to travel by that plane.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    Any yten is functioning based on data feeding to the ytem. This is basic in computer ytem, without doing how can we expect result.

Advertisement