Advertisement

ஹூரியத் அமைப்புக்கு பிரிவினைவாத தலைவர் கிலானி முழுக்கு

Share
ஜம்மு: காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான செய்யது அலி ஷா கிலானி, 90, ஹூரியத் மாநாட்டு அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

விமர்சனம்



காஷ்மீரின் சோபூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக மூன்று முறை பதவி வகித்தவர் செய்யது அலி ஷா கிலானி. பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகி, பிரிவினைவாத அமைப்புகளில் இணைந்து செயல்பட்டார்.


ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில அமைப்புகள், இவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தன. 'காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விஷயத்தில், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்தில், கிலானியின் செயல்பாடுகள் சரியில்லை' என, பாகிஸ்தானிலிருந்து செயல்படும்
அமைப்புகள் கண்டித்தன. கிலானி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

விலக முடிவு



இந்நிலையில், ''ஹூரியத் மாநாடு அமைப்பின் தற்போதைய சூழலை கருத்தில் வைத்து, அந்த அமைப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். ''இந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலகுவது என முடிவு செய்துள்ளேன். இது தொடர்பான என் கருத்தை, அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டேன்,'' என, அவர் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (22)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    இவர் என்ன சின்ன கலைஞரா ? 90 வயசு வரைக்கும் பதவியை கெட்டியா பிடிச்சிட்டிருந்திருக்கார் ??

  • unmaitamil - seoul,தென் கொரியா

    இதுபோல் சோனியா, சோனியா குடும்பத்திற்கும் விரைவில் இந்த நிலை வரும். இவர்கள் நாட்டிற்கு செய்த துரோகங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. கான்கிராஸில் இருந்து விரட்டப்பட்டு இத்தாலிக்கு ஓடும் நிலை விரைவில் வரும்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    உன்னிடம் ஒருவன் ஒரு செய்தி சொன்னால் அவன் பின் புலம் பார் அவன் முஸ்லீம் கிருத்துவன் திராவிடன் என்றால் நம்பாதே அவன் சொன்னதை மறு பரிசீலனை செய் அவசியமாக.

  • Anand - chennai,இந்தியா

    இவன் இன்னுமா இருக்கிறான்?

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    முஸ்லிம்களை கேலிப்பொருளாகவும் அயோக்கியர்களாகவும் உலகுக்கு அறிமுகப்படுத்திய, அவர்களில் சிலரை மக்கள் விரோதிகளாக மாற்றிய இவர் போன்றவர்கள் ...... ஆறாவது விரல்.

Advertisement