Advertisement

கேரளாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா

Share
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,310 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி 23 ஆனது. பாதிப்பு அடைந்தவர்களில் 2,057 பேருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீதிப் பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 78 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 5 பேருக்கு தொடர்பின் மூலம் கொரோனா தொற்றியது. இதில் சிஎஸ்ஐஎப் ஐச் சேர்ந்தவர்கள் 9 பேர், சுகாதாரப்பணியாளர்கள் 3 பேர் என்று மாநில முதல்வர் பினாராயி விஜயன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக 26 பேருக்கும், கண்ணூரில் 14 பேருக்கும், மலப்புரம், பத்தனம்திட்டாவில் முறையே 13 பேருக்கும், பாலக்காட்டில் 12 பேருக்கும், கொல்லத்தில் 11 பேருக்கும், கோழிக்கோட்டில் 9 பேருக்கும், ஆலப்பழா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், காசர்கோடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

    I appreciate Dinamalar.

  • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

    கேரளா ஒரு புனித நாடு. இந்நாட்டை பற்றி இந்தமாதிரி அவதூறு செய்திகள் போட்டால் நீதி மையத்தின் கோபத்திற்கு ஆளாவீர்கள். கேரள மண் தமிழ் தலைவர் உங்களை சும்மா விடமாட்டார்.

  • Chandramoulli - Mumbai,இந்தியா

    உண்டி குலுக்கிகள் மூடி மறைப்பதில் பலே கில்லாடிகள்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    கேரளாவில் பினரயியை பார்த்து கொரொனா பயப்படுதுன்னு கொரளி வித்தை காட்டுனாங்க?

Advertisement