Advertisement

வாரங்கல் ஜவுளி பூங்காவில்... முதலீடு செய்யுங்க! தொழில் துறையினருக்கு அழைப்பு

Share
திருப்பூர்:தெலங்கானா, வாரங்கல் ஜவுளி பூங்காவில், திருப்பூர் பின்னலாடை துறையினர் முதலீடு செய்ய வேண்டுமென, அம்மாநில அரசு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.ஜவுளி சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பெற செய்வது குறித்து, தேசிய அளவிலான 'ஆன்லைன்' கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் துவக்கிவைத்தார்.
இதில், தெலங்கானா, ஜவுளி இயக்குனர் மிகிர் பிரகாஷ் பேசியதாவது:வாரங்கல் மாவட்டத்தில், காக்கஸியா ஜவுளி பூங்காவை தெலங்கானா, அரசு உருவாக்கி வருகிறது. மின்சாரம், போக்குவரத்து, தொழிலாளர் தங்கும்விடுதி, தண்ணீர் உட்பட எல்லா வகையான அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது.நுாற்பாலை, நிட்டிங், டையிங், பிரின்டிங் உட்பட ஆடை உற்பத்தி என அனைத்து கட்டமைப்புகளையும் நிறுவமுடியும். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கு மானியம், மத்திய அரசு 25 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என, 50 சதவீதம் மானியம் என ஏராளமான சலுகைகள் செய்துதரப்படுகிறது.
எனவே, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், தெலுங்கானா தொழிற்பூங்காவில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் பேசியதாவது:கொரோனாவால், எல்லா துறைகளும் பாதிப்படைந்துள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான புதிய வரையறை நடைமுறைக்கு வருகிறது.
50 கோடி முதலீடு மற்றும் 250 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள் பட்டியலுக்குள் வருகின்றன.இந்த நடவடிக்கையால், ஏராளமான நிறுவனங்கள் பயன்பெறும். ஜவுளித்துறையில், புதிய தொழில்முனைவோர் வருகை அதிகரிக்கும். செலவினங்களை குறைக்கவேண்டும். வரி விலக்கு சலுகைகள், போட்டி நாடுகளுக்கு பலம் சேர்க்கின்றன.உற்பத்தி செலவினத்தை, 10 சதவீதம் வரை குறைப்பதன்மூலம், பிற நாடுகளுடனான போட்டியை, ஜவுளித்துறையினர் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement