Advertisement

வங்கியில் கூடும் பெருங்கூட்டம்: மக்கள் அலட்சியத்தால் அபாயம்

Share
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், மக்கள் கூட்டமாக நிற்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில், இரண்டு போலீஸ் உள்பட மொத்தம், ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள பகுதிகள், 'சீல்' செய்யப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 300 மீ., தொலைவுக்குள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்நிலையில், இந்த வங்கியில் எப்போதும் மக்கள் பெரும் கூட்டமாக நின்று வங்கி சேவைகளை பெறுகின்றனர். வங்கிக்குள் மட்டுமின்றி, வங்கிக்கு வெளியிலும் கூட்டமாக, வரிசையில் நிற்கின்றனர்.
கொரோனா பாதிப்பின் தீவிரத்தை அறியாத அதிகாரிகள், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். ஏ.டி.எம்., இயந்திரம் பயன்படுத்தும் மக்களுக்காக, 'சானிடைசர்' கூட வைக்கப்படாமல் உள்ளது.இச்செயல், கொரோனா பரவும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. வங்கி அதிகாரிகள், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். வங்கிக்கு வரும் மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி வங்கி சேவைகளை பெற வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    இது போல் நாகை மாவட்டம் ,தரங்கம்பாடி தாலுகா,ஆக்கூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் தினமும் மிகப்பெரிய கூட்டம் நிரம்பி வழிகிறது.கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளனர்.நடவடிக்கை காவல்துறை மூலம் செய்ய வேண்டுகின்றோம்.

Advertisement