Advertisement

59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

Share
புதுடில்லி : 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதன்படி, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ., ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்' உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், 130 கோடி மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து, சமீப காலமாக கவலைகள் தெரிவிக்கப்பட்டன. சில, 'மொபைல் போன்' செயலிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தரவுகள் திருடப்படுவதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சத்திற்கு, பல புகார்கள் வந்தன.


இந்தியாவுக்கு வெளியே உள்ள, 'சர்வர்'கள் மூலம், இந்த சட்டவிரோத முயற்சிகள் நடந்து வந்தது தெரிய வந்தது. இது, நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், உடனடி நடவடிக்கைகள் இதில் தேவைப்பட்டன. அதை கருத்தில் கொண்டு, 59 செயலிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7 + 42)

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  எப்படியும் JIO காரன் விடமாட்டான் இந்த APP எல்லாம் இவன் கொடுக்கும் DATA வினால் தான் அதிகம் என்று இவன் வந்தானோ அன்று தான் சிறிய பசங்கள் கூட CELLPHONE என்று அலப்பறை , தனியே உட்கார்ந்து கொண்டு பார்க்கிறார்கள் அப்போ ஏதோ தவறான வீடியோ என்று தெரிகிறது , செய்த நல்ல செயல் இது தான...

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  என்னவோ....

 • பாமரன் -

  விடாதீங்க தல... இதைத்தான் ஆப்புன்னு சொல்வாய்ங்க... இந்தியா வல்லரசு ஆகிடும் டோய்.... அவனால் பழி வாங்க முடியாது.... ஏன்னா நம்ம ஆப் எதுவும் அவன் யூஸ் பண்ணுறதில்லையே...பிம்பிளிக்கி பிளாக்கி....

  • Shekar - Mumbai

   வெட்கமே இல்லாமல் அடுத்த நாட்டுக்கு வால் பிடிக்கிறாய்.

  • Anand - chennai

   vetkam yenbadhu madhamaari kaikkooligalukku kidaiyaadhu.

 • தமிழ் -

  இவற்றை தடை செய்ததே மேல். தயவுசெய்து நிரந்தரதடை போடுங்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவனவன் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. சினிமாவைவிட இவற்றில்தான் ஆபாசம் அதிகமாக உள்ளது. வீட்டில் தனிமையில் செய்வதையெல்லாம் இவர்களே ரெகார்ட் செய்து அனுப்புகிறார்கள். அதற்கு லைக் வேறு. கருமம்.

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  அருமை. சரியான முடிவு.

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு அதிரடி தடை (40)

 • Visu Iyer - chennai,இந்தியா

  விபிஎன் மூலமாக பயன் படுத்த முடியும் தானே.. அதை என்ன செய்வது..

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  நீ இவ்வளவு மக்கா?

 • g.selvaraju - ambattur,இந்தியா

  tik-tok- ல் என்னா ஆபாசம், நிரந்தர தடை வேண்டும். பிரதமரின் அற்புத நடவடிக்கை. பாராட்டுவோம்.

 • N Shanmuganathan -

  அருமை இது போலநடவடிக்கை அனைத்து சீன பொருட்களளிலும் தேவை ஜெய்ஹிந்த்

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  தடை என்றால் என்ன? எப்படி ரிமோவ் பண்ண போறீங்க?

 • Indhuindian - Chennai,இந்தியா

  Welcome move by Modij's Government. Better late than never. Boycott and shun everything Chinese- from Mobile Apps to cosmetics to toys to what not. India is a vast market for China. If Indians either voluntarily or otherwise close their door on Chinese products, Chinese economy would suffer and for right reasons

 • Marcopolo - Chennai,இந்தியா

  ரொம்ப நல்ல முடிவு. மெல்ல மெல்ல சீன பொருள்களின் வரவையும் குறைக்க வேண்டும். அதற்கு ஈடான எந்த பொருளும் நம் நாட்டிலேயே குறைந்த வரி உடன் தயாரிக்கவேண்டும்,

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  அப்படியே சீனா போன் மற்றும் பொருளுக்கு தடை விதித்தால் நன்றாக இருக்கும்....

 • Kalam - Salem,இந்தியா

  இதுவே கொஞ்சம் லேட்.

 • aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து

  app ஐ சில நொடிகளில் நீக்கலாம் , ஆனால் " MADE IN CHINA " என உள்ள phone களை எத்தனை பேர் உடைத்து எறிந்து உங்கள தேச பற்றை நிரூபித்தீர்கள். கிரிக்கெட் நேர தேச பற்று எல்லாம் நாட்டை காக்க உதவாது.

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  சூப்பர். வெச்சார் பாரு ஆப்பு. நம்ம மக்களாவே புறக்கணிச்சிருந்தா இன்னும் கெத்தா இருந்திருக்கும்.

 • sahayadhas - chennai,இந்தியா

  ஐஐயோ பல பெண்கள் வருத்தப்படுவார்களே,

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  ஜெய்ஹிந்த்

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  எடுத்தாச்சு, கவுத்தாச்சுன்னு தடை.. தடை சரி, அதை எப்படி செயல்படுத்துவார்களாம்? போலீசை விட்டு லாட்டியை உள்ளே விடுவார்களா ? 90% போலீசே டிக்டாக் கில் இருக்கானே? இந்த காமெடி கூத்துக்கு ஜெய்ஹிந்த் வீரவசனம். ஜெய்ஹிந்த் கோஷத்தை வெளிக்கொணர்ந்த சுபாஷ்ஜி இதை கேட்டா என்ன செய்வாரோ?

  • Gsanky - Bangalore,இந்தியா

   சைனா சர்வருக்கு போகிற டேட்டா வை, நம்ம கேட்வேயில் தடுக்க முடியும். நீங்க டிக்டாக் வீடியோ எடுக்கலாம். அப்லோட் பண்ணமுடியாது. நீங்களே பார்த்து மகிழ்ந்து கொள்ளலாம். அது சரி, சீனாவில் கூகிள், வாட்ஸாப் எல்லாம் தடை என்கிற விஷயமாவது உங்களுக்கு தெரியுமா?

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  This is what is called PENNY WISE AND POUND FOOLISH .. சில்லறையில் சிக்கனம், ஆனால் கட்டுக்கட்டாய் நோட்டு விரயம்ன்னு சொல்லலாம். வாசல் கதவை தொறந்து வெச்சிட்டு ஜன்னலை மூடினால் பாதுகாப்பு என்கிறார்கள். அதானியின் சூரிய மின்னொளி நிலையங்களை இயக்கும் SCADA மின்னணு கட்டுப்பாடு அமைப்பு, அம்பானியின் நிலக்கரி, நீர் மின்திட்டங்களில் பயன்படுத்தப்படும் சீன இயந்திரங்கள், அவைகளின் கட்டுப்பாட்டு மையங்கள் (சீனாவில் வடிவமைக்கப்பட்டு, நீஎனாவில் தயாராகி) இயங்கும் மின்னணு சாதனங்கள் மற்றும் SCADA கட்டுப்பாட்டு நிர்வாக சாதனங்கள் - இவை எல்லாம் "அபாயகரமானவை" அல்ல.. அது மட்டும் ஏன் அப்படி? இந்த மின்னணு சாதனங்களில் மைக்ரோகோட் இல்லை என்று கண்டிப்பாக சொல்லமுடியுமா ? இந்த சாதனங்களில் பல இன்றும் சீன நிறுவனங்களால் பராமரிப்பு செய்யப்படுகின்றன என்று தெரியுமா? இன்று உலகளவில் இருக்கும் Internet Of Things (IoT) சாதனங்களில் (அலெக்ஸ்சா முதற்கொண்டு வீட்டில் இருக்கும் தானியங்கி மின் உபகரணங்கள்) சீன மின்னணு பொருட்களும், மென்பொருட்களும் மலிந்து கிடக்கின்றன. இவ்வளவு ஏன், நமது தேர்தல் வாக்கெடுப்பு இயந்திரங்களில் உள்ள மின்னணு சாதனங்களில் பல, நமது கணினிகள் கிட்டத்தட்ட 90%, நமது கைபேசிகள் கிட்டத்தட்ட 90% எல்லாமே சீன மின்னணு சாதனங்கள். மென்பொருட்கள் சீனாவில் பதிவேற்றம் ஆனவை. அவைகளில் அபாயம் இருக்காதா ? Bottom line - இவைகளை தடை செய்வதால் ஒரு சில தேவையற்ற மென்பொருள்களை தவிர, வேறு எந்த நிறுவனத்துக்கும் நஷ்டம் கிடையாது.

 • பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா

  அப்போ டிக் டாக் பிரபலம் எல்லாம் கூடிய சீக்கிரம் போராளி ஆகிடுவங்க

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  How about hardware devices like mobile phones, and computer accessories?

 • karikalan - chennai,இந்தியா

  சூப்பர். இத தான் ஓரொரு இந்தியனும் எதிர்பார்த்தது.

 • Sankar - Chennai,இந்தியா

  Fantastic Decision by Modi government

 • appavi - cumbum,இந்தியா

  நல்ல விஷயம்.எப்ப இருந்து அமலாகிறது ?

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  நல்ல முடிவு . ஒவ்வொரு மாநிலமும் இதுவரை போடப்பட்ட அல்லது அரைகுறையாக நிற்கும் சீனா கான்ட்ராக்ட்களை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் சுற்றி திரியும் உண்டிக்குலுக்கி தலைவர்களையும் கண்காணிக்க வேண்டும். சரியான தில்லுமுல்லு பேர்வழிகள்

 • Nallavan Kettavan - Madurai,இந்தியா

  Good decision by central government.. people are becoming crazy and they should come out of tik tok app. Next step : Industry should stop importing raw material from china.they need to localise and start using raw material available in india. It will be little expensive, but it can be managed in overheads

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அருமை.... சீன தயாரிப்புகளில் கொரோனாவை விட மோசமானவை அருணனும் டிக்டாக்pகும் .....

 • வல்வில் ஓரி - தயிர் வடை ,பஞ்சம பரதேசி ,இந்தியா

  எப்படியும் JIO காரன் விடமாட்டான் இந்த APP எல்லாம் இவன் கொடுக்கும் DATA வினால் தான் அதிகம் என்று இவன் வந்தானோ அன்று தான் சிறிய பசங்கள் கூட CELLPHONE என்று அலப்பறை , தனியே உட்கார்ந்து கொண்டு பார்க்கிறார்கள் அப்போ ஏதோ தவறான வீடியோ என்று தெரிகிறது , செய்த நல்ல செயல் இது தான

 • C.Elumalai - Chennai,இந்தியா

  தலை சிறந்த அற்புத தடைக்கு நல்மனம் கொண்டோர்கள் வரவேற்பார்கள்.

 • நக்கல் -

  ஆப்புகளுக்கு ஆப்பு....

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

  சூப்பர் சார் THANK YOU

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  விவாத மேடையில் அந்த கூட்டத்தை சேர்ந்தவனும் / கம்மி சேர்ந்தவனும் சொல்லுறானுங்க இந்தியக்காரர்கள் இந்த மாதிரி எல்லாம் டெவெலப் பண்ண அறிவு இல்லயமாம் ??? அதே போல் காசு நிறைய கொடுத்து வாங்க மாட்டார்களமாம் டேய் சீனா கைக்கூலிகள என்னமா கதறுகிறீர்கள் ??? போங்கடா இந்தியாவின் திறமையை மட்டம் தட்டுவது தான் உங்க பொழப்பு ????

 • சுடலை மாடசாமி -

  ஏற்கெனவே மொபைலில் இவை இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் தொடர்ந்து வேலை செய்யுமா?

 • Visu Iyer - chennai,இந்தியா

  போன் சீனாவுடையதே அதை என்ன செய்ய.. கம்ப்யூட்டர் லேப் டாப் என அனைத்தும் சீனாவிடம் இருந்து தானே.. அதை என்ன செய்ய... வழக்கம் போல இது ஒரு திசை திருப்பல் அவ்வளவு தான்... மக்கள் இதற்கு பின்னால் ஆகா.. சூப்பர் என கோடி பிடிப்பார்கள்.. அவர்கள் குளிர் காய்வார்கள்.. பலன் அவர்களுக்கு நேர விரையம் இவர்களுக்கு..

 • sundarsvpr - chennai,இந்தியா

  நல்ல முடிவு. சைனாவுடன் நேரடி மோதல்.. விவேகமான ராணுவ நடவடிக்கை போன்றவையால் வெற்றிபெறலாம். உள்நாட்டில் மாயாவதி ஆதரவு தி மு க நிதிஷ் குமார் போன்றோர் வெளிப்படை ஆதரவு தார்மீக பலம். உள்நாட்டில் சில ஊடகங்கள் திட்டமிட்டு மறைமுகமாய் நாட்டு நடவடிக்கைகளை விமர்சனம் செய்கின்றன. இவைகள் தான் சீனாவைவிட ஆபத்து.

 • Vijay - Bangalore,இந்தியா

  ராவுல் மூஞ்சை எங்க வச்சிப்பார் , இத தெரிஞ்சிக்கிட்டு தான் பெட்ரோல் டீசல் என்று கூவல்

 • S.V ராஜன்(தேச பக்தன்...) - chennai,இந்தியா

  வந்தே மாதரம்... ஜெய்ஹிந்த்...

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சீனா கைக்கூலிகள் கதறல் சத்தம் இங்கே வரைக்கும் கேட்குதே ???

 • suresh kumar -

  super step from modi government

 • suresh kumar -

  super step from modi government 👏👏👏👍👍✌ 🇮🇳👍👍🇨🇳👎👎👎👎👎

 • Perumal Rajesh -

  சூப்பர்

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  அற்புதமான முடிவு

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  மிகவும் நல்லது.

Advertisement