Advertisement

தலைமை நீதிபதியின்பைக் அவதாரம்: சமூக ஊடகங்களை,கலக்கிய போட்டோ

Share
நாக்பூர் : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, 'ஹார்லி டேவிட்சன் சூப்பர் பைக்' எனப்படும், அதி நவீன, வெளிநாட்டு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும், அனுபவித்து வாழ வேண்டும் என ஆசைப்படுவது ஒரு சிலர் மட்டுமே. அவர்களுக்கு இந்த ஆசை இருந்தாலும், அவர்கள் வகிக்கும் பதவி, அதை அடைவதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கலாம். அதிலும், நீதிபதிகளாக பதவி வகிப்போருக்கு கேட்கவே வேண்டாம்; மற்றவர்களை போல ஜாலியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களது பதவி, அதற்கு தடையாக இருக்கும்.பொழுதுபோக்கு, சக மனிதர்களுடன் இயல்பாக பேசுவது போன்றவற்றை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டுத் தான், அவர்கள் பணியாற்றுகின்றனர்.


ஆனால், 'அப்படியெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை; நீதிபதிகளாக இருந்தாலும், சக மனிதர்களுக்கு உள்ள ஆசை எங்களுக்கு இருக்காதா...' என, புதிய அவதாரம் எடுத்து, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, 64. இவர், ஊரடங்கு உத்தரவால், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தன் வீட்டில் இருக்கிறார். 'பைக்' மீது அலாதி ஆர்வம் உள்ள தலைமை நீதிபதி, 'நான் ஒரு புல்லட் வைத்துள்ளேன்' என, ஏற்கனவே கூறியிருந்தார்.வித்தியாசமான பைக்குகளை பார்த்தால், அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, தலைமை நீதிபதியிடம் அடிக்கடி எட்டி பார்க்குமாம். ஒரு முறை அப்படி ஒரு பைக்கை ஓட்டிப் பார்த்து, விபத்தில் சிக்கி காயம் பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு.
இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அதிநவீன பைக்கில், அவர் அமர்ந்திருக்கும் படம், சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்துக்கு பலர் விருப்பம் தெரிவித்து, மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரித்துள்ள, சி.வி.ஓ., - 2020 என்ற இந்த மோட்டார் பைக், 1933 சி.சி., இன்ஜின் உடையது. இந்தியாவில் இதன் விலை, 51 லட்சம் ரூபாய்.
இந்நிலையில், 'பாப்டே, இந்த பைக்கில், ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணியாமல் உள்ளார்' என, சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. 'அவர் பைக்கில் உட்கார்ந்து தான் பார்த்தார்; ஓட்டவில்லை. போட்டோவுக்காக முக கவசத்தை கழற்றினார்' என, அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,''தலைமை நீதிபதி அமர்ந்திருக்கும் இந்த பைக், நாக்பூரைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் ஒருவருக்கு சொந்தமானது,'' என, கூறியுள்ளார். தலைமை நீதிபதிக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆட்டோமொபைல் டீலர் சார்பில், இந்த பைக் எடுத்து வரப்பட்டது. தலைமை நீதிபதி, அந்த பைக்கில் ஏறி, சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
அந்த பைக்கை, அவர் ஓட்டவில்லை. அதன் உரிமையாளர் யார் என்பதும், அவருக்கு தெரியாது. பணி ஓய்வு பெற்ற பின், இதுபோன்ற பைக்கை வாங்க, அவர் திட்டமிட்டிருந்தார்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  The high-end bike is registered in the name of Rohit Sonbaji Musale, son of Sonba Musale who is a BJP leader from Nakpur. இவரு தான் தலைமை நீதிபதி.. இது லஞ்சமாக இவருக்கு தரப்பட்டதாக கூட இருக்கலாம்.. இது நாக்பூரில் உள்ள பாஜக தலீவர் சோன்பா முஸாலே வின் மகன் ரோஹித் சோன்பா முஸாலே யோட ஹார்லி டேவிட்ஸன், இந்த மாடல் விலை கிட்டத்தட்ட ரூ 35 லட்சம்.. இன்னொரு ஏழை தாயின் மகன் போல ..

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  சிக்குலர் நபர்கள் (பிரசாந்த் பூஷன் போன்றவர்கள்) யாரையும் அவர்கள் வாழ்க்கை வாழ விடமாட்டார்கள்... அந்த பைக் யாருக்கு சொந்தமாக இருந்தால் என்ன?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  விளம்பரத்தூதுவரில்லாத விளம்பரத்தூதுவரா?. இப்படியும் விளம்பர படுத்துகிறதா நிறுவனம்? வண்டியில் அமர்ந்தோம், போட்டோ எடுத்தோ, ஏன் ஒட்டிகூட பார்க்கலாம் தப்பில்லை. அதை பகிரங்கப்படுத்தினால் பொது ஊடகத்தில், கம்பனிக்குதான் விளம்பரம், அதை பத்திரிகைகள் தெரிந்து எடுத்து பிரபல படுத்திடுவதால் தான் எதோ கம்பனியின் விளம்பர யுக்தியாக இருக்குமோ என்று என்ன இடம் வந்துவிடுமே?

  • Muruga Vel - Mumbai,இந்தியா

   வண்டியில் அமர்ந்தோம், போட்டோ எடுத்தோ, ஏன் ஒட்டிகூட பார்க்கலாம் தப்பில்லை... vera maadhiri padichen

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  வண்டிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத உடல்வாகு கொண்டவராக இருக்கிறார்.

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  ///இந்த பைக்கை ஒரு பாஜக தலைவரின் பையன்தான் இவருக்கு வாங்கி கொடுத்துள்ளார் என்று செய்திகள் உலா வருகிறதே, அது உண்மையாக இருக்குமா?/// இருந்திட்டு போகட்டும்...ஏன் நீ ஒட்டு போட்ட ராசா & கனிமொழி செய்யாத ஊழலா..அப்படியே ஹரிச்சந்திரனுக்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வச்ச மாதிரி...

Advertisement