Advertisement

பாதிப்பை குறைத்து காட்ட முயற்சியா? கலெக்டர்கள் நடவடிக்கையால் அதிர்ச்சி

Share
சென்னை : சென்னை தவிர பிற மாவட்டங்களிலும்,கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பதவியை தக்க வைப்பதற்காக, பாதிப்பை குறைத்து காட்ட, சில மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருவது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், சென்னை மாநகராட்சி சொதப்பியதால், சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சந்தேகம்பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த நிலையில், சில நாட்களாக, அங்கும் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து சென்றவர்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் காரணமாக, தொற்று பரவியுள்ளது.

அதேநேரத்தில், ஆரம்பத்தில், கொரோனா தடுப்பில் இருந்த தீவிரம், மாவட்டங்களில் குறைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள் என, சிறப்பு அதிகாரிகள் கூறினாலும், மாவட்ட கலெக்டர்கள் கண்டு கொள்ளவில்லை. சென்னையை தவிர்த்து பல மாவட்டங்களில், கொரோனா பரிசோதனைகள் இன்னும் அதிகரிக்கப்படவில்லை.

பதவிக்கு சிக்கல்பரிசோதனை கருவிகள் போதுமானதாக இல்லை என காரணம் கூறப்பட்டாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்தால், தங்கள் பதவிக்கு சிக்கல் வந்துவிடும் என, பல கலெக்டர்கள் அஞ்சுவதும் முக்கிய காரணம். இதனால், பரிசோதனைகளை குறைவாக நடத்தவும், பல்வேறு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யுங்கள் என்றும், அரசு மருத்துவர்களுக்கு, கலெக்டர்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே, சில மாவட்டங்களில், 20 பேருக்கு பரிசோதனை செய்தால், இரண்டு, மூன்று பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது, 10 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே, தலைவலி, சளி, லேசான காய்ச்சல், சுவை அறியும் தன்மை குறைவு உள்ளிட்ட கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

நடவடிக்கைஇவ்வாறு, நாள்தோறும் ஏராளமானவர்கள் அரசு பரிசோதனை மையங்களுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதிக காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளவர்கள் மட்டுமே, பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.இதேநிலை தொடர்ந்தால், லேசான அறிகுறியுடன் உள்ளவர்கள், முறையான சிகிச்சை இன்றி, உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
சென்னையை போன்று, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என, மருத்துவ குழுவினர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். எனவே, பிற மாவட்டங்களிலும் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க செய்வது, பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்தோரையும் தனிமைப்படுத்துவது; மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவது என, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் உரிய கவனம் செலுத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • g.selvaraju - ambattur,இந்தியா

  சென்னையை போல டெஸ்டிங்கை எல்லா மாவட்டத்திலும் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரை எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். டெஸ்டிங்கை குறைத்து எங்கள் மாவட்டத்தில் தொற்று இல்லை என்று காமிக்க முயற்சி செய்தால், தொற்றுள்ளவர் பல பேரிடம் பழகி அமெரிக்கா போல ஆகி விடும். எங்களை காப்பாற்றுங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆடசியர் அவர்களே.

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  இப்பவாவது மக்களே உணருவீங்களா , சமூக இடைவெளி முக்கியம்டா

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்து, பின்னர் எப்படியோ கலெக்ட்டர்களாகி தமிழ்நாட்டுக்கு வந்து அவர்கள் ஒப்புக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஹிந்தியை போன்றே கணிதமும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. அதனால் அவர்களால் இறந்தவர்களின் கணக்கை சரியாக சொல்ல முடியாமல் போயிருக்கலாம். அதெல்லாம் ஒரு குற்றமா? இருங்க சார் கடைசியில் "வாஸ் அவுட்" என்று சொல்லுவார்கள்.

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   ennae oru arivu

 • blocked user - blocked,மயோட்

  இது போன்ற கோமாளித்தனங்களை செய்வதை விட பொதுமக்களை பீதியில் வைத்தாலாவது நோய் பரவுவது குறையும்.

Advertisement