Advertisement

நெகட்டிவ் வந்தால் தனிமை வேண்டாம்: முடிவில் பின்வாங்கிய மாநகராட்சி

Share
சென்னை :'பரிசோதனை முடிவுகளில், கொரோனா தொற்று இல்லை என்றால், தனிமை வேண்டாம்; வழக்கம் போல அவர்களது பணியை செய்யலாம்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யும் நபர்கள், முடிவு வரும் வரை, தங்களை வீட்டிலேயே கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டால், புதிய நடைமுறைப்படி, வழக்கம் போல, அவரவர் பணியை மேற்கொள்ளலாம். அரசின் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, தனிமனித இடவெளியை பின்பற்றுவதுடன், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிய வேண்டும்.பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை செய்த நபரின் வீட்டில் உள்ளவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கான அனைத்து, 'ஸ்கிரீனிங்' பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளிலோ, கொரோனா தடுப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் செயலால் குழப்பம்'பரிசோதனை செய்தாலே தனிமைப்படுத்தப்படுவர்; முடிவில், 'நெகட்டிவ்' என்று வந்தாலும், தனிமை தொடரும்' என்ற அறிவிப்பை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ஜூன், 11ல் அறிவித்தார். இந்த அறிவிப்பால், பலர் தாமாக முன்வந்து, பரிசோதனைக்கு செய்ய தயங்குவர் என, சுகாதாரத்துறை எச்சரித்தது.மாநகராட்சி கமிஷனரின் தன்னிச்சையான செயலை சுட்டிக்காட்டி, நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.


எனினும், தன் முடிவில் இருந்து பின்வாங்குவதில்லை என்ற நிலையில், மாநகராட்சி கமிஷனர் இருந்து வந்தார்.தற்போது, தமிழக அரசின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து, 'தொற்று இருந்தால் தான், தனிமைப்படுத்தப்படுவர்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது. 'எங்களுக்கு அதிகாரம் உள்ளது; நாங்கள் சொல்வது தான் சட்டம் என, சட்டாம் பிள்ளைத்தனமாக மாநகராட்சி செயல்படுதல் கூடாது; அனைத்து தரப்பினரையும் ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். 'ஏற்கனவே, எடுத்த முடிவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Rajas - chennai,இந்தியா

  இவரை மற்ற சொல்லி எல்லா பத்திரிகைகளும் எழுதி விட்டன. சீனியர் IAS அதிகாரிகளும் அரசுக்கு பல முறை சொல்லி விட்டனர். மத்திய அரசின் சுகாதாரத்துறையும் சொல்லி விட்டது. அப்படியும் இந்த பதவியில் இருக்கிறார் என்றால் என்ன காரணம். அந்த மந்திரி தான் காரணமா.

 • parthiban s - kolkata,இந்தியா

  தமிழகத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறந்த நல்ல கட்டமைப்புடன் உள்ளது. இந்த அபாயமான காலத்தில் மத்திய மாநில அரசின் செயல்பாடுகள் மெச்சத்தக்கவை. அதனை உலகமே பாராட்டுகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் மிகவும் மோசம்.. மாநிலத்தில் நோய் பரவலுக்கு இந்த ஆள்தான் காரணம். இவரின் பல முடிவுகளாலே இன்று தமிழகம் தத்தளிக்கறது. சுகாதாரம் மருத்துவம் காவல்துறை மற்றும் தன்னார்வலர்களின் அளப்பரிய தொண்டை இந்த மனிதர் வீணடித்து உள்ளார். கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் பரிசோதனை செய்தவரும் அவரது குடும்பத்தாரும் தனிமை படுத்தபடுவார்கள் என்ற இவரது உத்தரவின் காரணமாக மக்கள் பரிசோதனை செய்ய பயந்தனர் அதனாலே சென்னையில் நோய் தொற்று அதிகமானது. கோயம்பேடு மார்க்கெட்டின் வழிகள் மிகவும் குறுகளானவை அதை திறக்க அனுமதித்து விட்டு பல வாரங்களுக்குப் பின் அதனால்தான் நோய்த்தொற்று அதிகமாகிறது என்று காய்கறி சந்தையை திறந்த வெளிக்கு மாற்றிய அறிவாளி இவர். இவர் இனியும் பதவியில் தொடர்ந்தால் மத்திய மாநில அரசுகள் மட்டுமல்ல கடவுளே வந்தாலும் சென்னையையும் தமிழகத்தையும் காப்பாற்ற முடியாது.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  மக்களிடம் கருது கேட்கும் பொது பிரகாஷ் இன்னும் சில அதிகாரிகள் பொய் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புகின்றனர் என்பது நன்றாக தெரிகிறது. இவரை உடனே மாற்றுங்கள்.

 • Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா

  பிரகாஷ் அடிக்கடி தனது முதிர்ச்சியின்மையை காட்டுகிறார். அரசு தனிமை மையம் வீட்டில் உள்ளது போல சுத்தமாக இருக்குமா? மக்கள் பயப்பப்பிடுவதே தனிமை மையத்தில் கொரோனா தொற்றி கொண்டால் என்ன செய்வது என்பதுதான். தனிமை மையத்தில் உள்ள டாய்லெட்களை இவர்கள் பயன்படுத்துவார்களா?

 • R chandar - chennai,இந்தியா

  V should not blame any body preventive medicine should be invented and should be injected on all human body to prevent the spread , identify the medicine is only resolving the issue. Any how government should clean up the city and avoid putting garbage on the road , way to be identified to pick up garbage from source with segregation of garbage. Employ more person and make water supply through pipeline instead of lorry to avoid crowding for water see to it all supply of water should be supplied through pipe line to all residents install more diesalination of plants or increase the capacity of the plant in existence.Plant more trees and make all garbage collecting point as road side garden invite and encourage people to maintain the road side gardens wherever possible.

Advertisement