இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது
திருச்சி; இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர், உடந்தையாக இருந்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார்.
அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார். இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், 'சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்' எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். இது குறித்து, கன்டோன்மென்ட் மகளிர் போலீசில், நேற்று முன்தினம் பர்வீன் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், பலாத்காரத்தில் ஈடுபட்ட மதபோதகர் பாரூக், உடந்தையாக இருந்த அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர்.மேலும், உடந்தையாக இருந்த பாரூக்கின் மனைவி, அஸ்லாமின் தங்கையை தேடி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!