Advertisement

ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா

Share
அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 793 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவில் நோய் தொற்றுக்கு ஒரே நாளில் (இன்று காலை 9 மணி நிலவரப்படி) 793 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,891 ஆக உயர்ந்தது. நேற்று நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 813 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று புதிதாக 30,216 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை மாநிலத்தில் மொத்தமாக 8,72,076 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, 9,26,934 சோதனைகளுடன் ஆந்திரா, மகாராஷ்டிராவுக்கு பின்னால் உள்ளது மற்றும் தமிழகம் 11,10,402 சோதனைகளுடன் முன்னிலை வகிக்கிறது. இன்று 302 பேர் நோயில் இருந்து குணமடைந்தனர். மொத்தமாக 6,232 ஆக உயர்ந்தது. தற்போது 7,479 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் புதிதாக 11 பேர் பலியாகினர். இதையொட்டி, மாநிலத்தின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தது. புதிதாக பலியானவர்களில் கர்னூலில் 5 பேர், கிருஷ்ணா மற்றும் நெல்லூரில் தலா 2 பேர், விஜயநகரம் மற்றும் மேற்கு கோதாவரியில் தலா ஒருவரும் அடங்குவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement