Advertisement

கிராமங்களில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

Share
சென்னை: கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரும், சிறிய திருக்கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    புண்ணியம் செய்த மக்கள்

  • RVK - Chennai,இந்தியா

    மத மாற்றம் செய்ய அரசு வழியினை ஏற்படுத்தி தருகிறது.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    சரி அதையாவது செய்யுங்க. ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாத கொரோனாவை கோவில்களில் உள்ள சாமிகளாவது கட்டுப்படுத்துதா? என்று பார்ப்போம். சார் அதுக்காக டாஸ்மாக்கை மட்டும் மூடி விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    நல்ல முடிவு..

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    மறைமுகமாக ஆப்ரகாமிய மதங்களுக்கு சலுகை. ஆக்ரமிப்பு மத கூடாரங்களின் வருமானம் அரசுக்கு அறிவிக்கப்படுகிறதா? அரசு அவர்களின் கணக்குகளை ஆடிட் செய்கிறதா? போலீஸும் கலெக்டரும் எப்படி அமல் படுத்துவார்கள்? இந்துக்கள் மடையர்கள் ஆக்கப்படுகின்றனர்.

Advertisement